Police Department News

விருதுநகர் கள்ள சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்த போலீசார்

விருதுநகர் கள்ள சாராயத்தை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ள சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து கள்ள சாராயத்தை ஒழிக்க தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து ஏராளமானோரை கைது செய்துள்ளது.

வடமாவட்டங்களில் தற்போது கள்ள சாராய விற்பனை இருக்கும் நிலையில் தென் மாவட்டங் களில் கள்ள சாராயம் 90 சதவீதம் ஒழிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த காலத்தில் நடந்த கள்ள சாராய சாவுகளே காரணம்.

கடந்த 1995-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கள்ள சாராயம் குடித்து 27 பேர் பலியாகியுள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. கள்ள சாராய சாவு நிகழ்ந்த பின் இனிமேல் இதுபோல் நடக்காமல் இருக்க போலீசார் அப்போது தீவிர நடவ டிக்கை எடுத்தனர். விருது நகர் மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீசார் கள்ள சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கள்ள சாராய தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப் பணர்வு ஏற்படுத்தப் பட்டது.

தென் மாவட்டங்களில் கள்ள சாராயம் தலை தூக்காமல் இருக்க மாவட்ட போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்பவர்களையும், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பவர்களையும் போலீசார் கண்காணித்து கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்ற தொடர் நடவடிக்கை காரணமாக தென் மாவட்டங்களில் வெகுவாக கள்ள சாராய விற்பனை தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் மாவட்டத்தில் எங்கேனும் கள்ள சாராயம் தயாரித்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ள சாராயம் தொடர்பாக 91500 11000 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.