
போக்குவரத்து விதி மீறல்கள் மீது கடுமையான நடவடிக்கை டிஜிபி உத்தரவு
எட்டு விதமான போக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பாக தீவிர வாகன சோதனையில் ஈடுபடுமாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்
போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில் அதி வேகம் சிக்னல்களை மீறுதல் மொபைல் போனில் பேசியபடியும்
குடி போதையிலும் வாகனம் ஓட்டுதல் எதிர் திசையில் வாகனத்தை செலுத்துதல் அதிக நபர்களை வாகனத்தில் ஏற்றுதல் குறித்த விதி மீறல்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்
அதே போல் காரில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுவது இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் சீட்டில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிய மறுப்பது அப்பட்டமான விதி மீறல்கள் இது போன்று 8 விதமான போக்குவரத்து விதி மீறல்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் ஏற்கனவே உச்ச நீதி மன்றம் நடவடிக்கையெடுக்க பரிந்துரை செய்துள்ளது
இந்த 8 விதமான விதி மீறல்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கையெடுக்க வேண்டும் மாநிலம் முழுதும் தினம் 60 ஆயிரம் வாகனங்களாவது அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன நகரங்களில் 10 ஆயிரம் பேராவது சிக்னல்களை மீறுகின்றன.விபத்து தடுப்பு நடவடிக்கையாக அதிக வேகம் உட்பட எட்டு விதமான போக்குவரத்து விதி மீறல்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ள்ளது.
