
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் போதை ஒழிப்பு பேரணி
செங்கோட்டை காவல்துறை மற்றும் எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. செங்கோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார் தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி வரவேற்று பேசினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் பேரணியை தொடங்கி வைத்தார்.
பள்ளி மாணவர்கள் பேரணியாக வாஞ்சி நாதன் சிலை, கீழபஜார், காவல்நிலையம், தாலுகா அலுவலகம் வழியாக சென்று விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் இளவரசன் ஆகியோர் எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியில் காவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி உடற் கல்வி இயக்கு னர் சஞ்சய் காந்தி நன்றி கூறினார்.
