
பெண்களிடம் நகை பறிப்பு
மதுரை செல்லூர் பூந்தமல்லி நகரை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சித்ரா (40). இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 1¾ பவுன் தங்கச் செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சித்ரா கூடல்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்லூர் முனியாண்டி கோவில் தெரு 3-வது தெரு போஸ் வீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி வசந்தி (58). இவர் செல்லூர் 50 அடி சாலையில் நடந்து சென்றார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் வசந்தி கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து செல்லூர் போலீசில் வசந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
