
தென்காசி மாவட்டம் சிவகிரி பேரூராட்சியில் உணவகங்களில் 50 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்படுகிறதா என்று ஆய்வு செய்ய உத்தர விடப்பட்டது. அதன்பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய ஏராளமான உணவகங்களில் இருந்து பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சுமார் 50 கிலோ பைகளை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். இந்த ஆய்வின்போது சிவகிரி பேரூராட்சி வரி தண்ட லர்கள் முத்துப் பாண்டி, நாராயணன், துப்புரவு மேற்பார் வையாளர், இசக்கிராஜ் மற்றும் தூய்மை பணி யாளர்கள் உடன் இருந்தனர்.
