Police Recruitment

புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்கள்

புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்கள்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றியுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தேவகோட்டை நகருக்கு பஸ் மூலமாக அதிக அளவில் வந்து செல் கின்றனர். பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் களை குறைப்பதற்காக கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படுகிறது.

புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோக் கள் அதிகளவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறாகவே செய்து வருகின்றனர். புதிய பேருந்து நிறுத்தத் தில் நிறுத்தப்படும் நகரப் பேருந்துகள் இதனால் அருகில் உள்ள பேருந்து நிலையம் நுழைவாயில் வழி யாக செல்லும் நிலை ஏற்பட் டது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

புதிய பேருந்து நிலையத் தில் நிறுத்தப்படும் ஆட் டோக்களால் போக்கு வரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள் ளது.

காவல்துறையினர் அவ் வப்போது இந்த ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப் பட்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்து வரு கின்றனர். அத்துமீறி பஸ் நிலையத்தில் நுழையும் ஆட் டோக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.