
திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
இளம்பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, டாடா காட்டிய வாலிபருக்கு போலீசார் வலை
தூத்துக்குடியில் திருமண ஆசைகாட்டி மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் திருமூர்த்தி (20), இவர் 15வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, விசாரணை நடத்தி போக்ஸோ சட்டத்தி்ன்கீழ் வழக்குப் பதிந்து திருமூர்த்தியை கைது செய்தார்.