
யூனிட்டில் பணியாற்றும் போலீசாரின் பணியும், சட்டம் ஒழுங்கு போலீசாரின் பணியும்
தமிழக காவல்துறையில் யூனிட் என அழைக்கப்படும் குற்றப்பிரிவு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மாவட்டத் தனிப்பிரிவு போன்ற பல பிரிவுகளில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் போலீசார் பணிபுரிகின்றனர் இதனால் இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் சட்டம் ஒழுங்கு போலீசார் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு போலீசார் 24 மணி நேரமும் பணியில் உள்ளனர் விடுமுறை அரிதாகவே கிடைக்கும். ஆனால் யூனிட்டில் பணிபுரியும் போலீசார் காலை 10 மணிக்கு மேல்தான் வருவார் மாலை 5 மணிக்கு வீடுகளுக்கு சென்று விடுவார் அரசு விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு கிழமைகளில் அலுவலகம் செல்ல மாட்டார்கள் இரவு பணி கிடையாது இதனால் யூனிட்டில் பணியாற்றும் போலீசார் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர்.
வேலை குறைவு என்பதால் யூனிட்டில் பணியாற்றும் போலீசார் பலர் சொந்தத்தொழில் செய்கின்றனர் சட்டம் ஒழுங்கு போலீசார்தான் வேலை பழு மன உளைச்சல் உள்ளிட்ட
காரணங்களால் அதிக அளவில் இறந்துள்ளனர் எனவே யூனிட்டுகளில் பல ஆண்டுகளாக பணி புரியும் போலீசாரை சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு இட மாற்றம் செயய வேண்டும்
அது போல யூனிட்டுகளுக்கு இடமாறுதல் கேட்டுள்ள சட்ட ஒழுங்கு போலீசார் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும் மேலும் சட்ட ஒமுங்கு போலீசாரை போல் யூனிட்டுகளில் பணிபுரியும் போலீசாரை இரண்டரை ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இட மாற்றம் செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்
