
போலீஸ் ஏட்டு தற்கொலை
முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காத்தாகுளத்தைச் சேர்ந்த மூர்த்தி 42, பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்தார்.
நேற்று பணியில் இருந்தபோது நண்பரிடம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பு சென்று வருவதாக கூறினார்.
பின் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மூர்த்தி உடலை போலீசார் கைப்பற்றி முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் விசாரிக்கின்றனர்.
