Police Recruitment

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் PRESS ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு உலா வரும் டுபாகூர் பேர்வழிகள்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் PRESS ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு உலா வரும் டுபாகூர் பேர்வழிகள்

எந்த ஒரு பத்திரிகையிலும் பணி செய்யாமல் வெறும் Youtube சேனலை மட்டும் வைத்துக்கொண்டு நிறுவனர் ஆசிரியர் என்று மட்டுமில்லாமல் பிரஸ் என ஐ.டி., கார்டை அவர்களே தயார் செய்து போட்டுக்கொண்டு தங்களது இரு சக்கர வாகனத்திலும் பிரஸ் என்று ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு மதுரை மாவட்டத்தில் சிலர் உலாவிக் கொண்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள் தினந்தோறும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து அங்கு வரும் பொது மக்களிடம் பட்டா பெயர் மாற்றி தருகிறேன் உதவி தொகை பெற்று தருகிறேன் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அரசு அலுவலகங்களில் வலுக்கட்டாயமாக அங்கு உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அந்த வேலையை முடித்து கொடுப்பதாகவும் சில நேரங்களில் பணத்தை வாங்கிக் கொண்டு அந்த வேலையை முடிக்காமல் ஏமாற்றுவதாகவும் கூறப்படுகிறது.
இது போன்ற வேலைகளுக்காக தான் இந்த நபர்கள் தங்கள் வாகனங்களில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளை உலா வருவதாக தெரிகிறது
மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எண்ணற்ற காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நபர்கள் பிரஸ் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு வருவதால் அவர்களை கண்டு கொள்வதில்லை உங்களது ஐ.டி., கார்டை காட்டுங்கள் என்று கூறும் பொழுது அந்த நபர்கள் தாங்களாகவே தயார் செய்து வைத்துள்ள பிரஸ் என போட்டு உள்ள ஐ.டி., கார்டை காட்டுகிறார்கள் இதனால் காவல்துறையினரும் இவர்கள் ஏதோ ஒரு சேனலில் பணி புரிகின்றனர் என்று அவர்களாகவே முடிவு செய்து அவர்களை உள்ளே அனுப்பி விடுகின்றனர் ஆனால் அந்த நபர்கள் காட்சி ஊடகத்திலோ அச்சு ஊடகத்தில் இல்லை என்பது காவல்துறையினருக்கு தெரிவதில்லை சில வருடங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு பத்திரிக்கையில் பணி செய்து விட்டு அந்த காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலமாக வழங்கப்பட்ட ஊடகம் பிரஸ் வில்லையை இப்போதும் சிலர் அதைப் பயன்படுத்திக் கொண்டு அனைவரையும் ஏமாற்றிக் கொண்டு வருகின்றனர் அந்த வில்லையில் அவர்கள் எந்த நிறுவனத்தில் தற்பொழுது பணிபுரிகின்றனர் வாகன எண் எதுவுமே அதில் பதிவு செய்திருக்காது ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வில்லையில் எழுதப்பட்ட அனைத்தும் நாள்பட்டதால் அழிந்து போய் இருக்கும் இதை இவர்கள் சாதகமாக வைத்துக் கொண்டு அந்த ஸ்டிக்கரையும் சேர்த்து பிரஸ் என ஒட்டிக்கொண்டு ஒரு சிலர் உலாவி வருகின்றனர் சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்தது அதில் பிரஸ் என்று ஒட்டிக்கொண்டு வரும் வாகனத்தை சோதனை செய்ய வேண்டும் முறைகேடாக இது போன்று வாகனத்தில் ஒட்டிக்கொண்டு வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது இதன் பேரில் மதுரை மாவட்டத்தில் காவல்துறையினர் சில நடவடிக்கைகளையும் எடுத்து வந்தனர் ஆனால் தாங்களாகவே youtube இல் ஒரு சேனலை உருவாக்கிக் கொண்டு அதற்கு நான் நிறுவனர் ஆசிரியர் என சொல்லிக்கொண்டு பிரஸ் என ஐ.டி., கார்டையும் வைத்துக்கொண்டு கெத்தாக உலாவி வரும் இதுபோல் நபர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து களை எடுக்க வேண்டும் சமீப காலமாக அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதற்கு இதுபோன்ற புரோக்கர்களும் ஒரு காரணம் இந்த போலி நபர்களை களை எடுப்பதன் மூலம் அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறையும் சாமானிய மக்களின் அடிப்படை பணிகள் முறையாக நடைபெறும் பத்திரிக்கை துறையை தவறாக பயன்படுத்தி புரோக்கர் வேலை செய்யும் இது போன்ற டுபாக்கூர் பேர்வழிகளை காவல்துறையினர் முழுமையாக களை எடுக்க வேண்டும்.
நன்றி.
நீதி மலர்.

Leave a Reply

Your email address will not be published.