



மதுரை மாவட்டம்
குசவன்குண்டில்பொதுமக்கள்சாலைமறியல்
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட
குசவன்குண்டு கிராமத்தில் பில்லத்தி
கருப்பசாமி கோயில் உள்ளது.
இந்த கோவிலுக்கு உரிய வாரிசுகளாக;
குசவன்குண்டு, குதிரை குத்தி,சோளங்குருணி,வலையங்குளம்,எஸ்.ஆலங்குளம், திருமங்கலம் ,வலையங்குளம் போன்ற பல் ஒரு ஊரில் உள்ளனர்.
குசவன்குண்டு தொகுதியைச் சேர்ந்த முத்தையா மற்றும் தம்பி வீரணன் ஆகியோர் இந்தக் கோவில் தங்களுக்கு சொந்தமானது என்றும் இதற்கு சொந்தமானஇடங்கள் என்றும் மற்ற வாரிசான ராஜம்மாள் பெயரில் போலியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதனை அறிந்த கிராமத்து பொதுமக்கள் கோயில் நிலம் போலே பட்டா மூலம் ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் தாசிலர் மற்றும் போலீஸ் அதிகாரியுடன் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்து பொது மக்கள் சோளங்குருணியிலிந்து
மலையங்குளம் பைபாஸ் ரோட்டில் சாலை மறியல் செய்தனர்
சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பெருங்குடி காவல் நிலைய போலீசார் எஸ் ஐ பாஸ்கரன் ஆகியோர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை செய்து மறியலை கைவிட செய்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மதுரை தெற்குத் தாசிலர் சரவணன் கோயில் நிலம் குறித்து பட்டாவினை ஆய்வு செய்தார்.
பின்னர் கிராம மக்களிடம் பட்டா கிராமத்து பெயரில்தான் உள்ளது இதனால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றார்.
