Police Department News

சாமானியனின் மீது அரிவாள் வெட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல்.

சாமானியனின் மீது அரிவாள் வெட்டு ஆறு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல்.

05/09/2024
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் வண்டல் கிராமத்தில் மதிக்கத் தக்க நபராக பழனி இருப்பதால் ஊரில் நடக்கக்கூடிய திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை ஊர் பெரியோர்களுடன் முன்னின்று நடத்தி வந்துள்ளார், இதை பொருதுக்கொள்ளமுடியாத நந்தக்குமார், இளையராஜா, மணிகண்டன் என்கின்ற மணிமாறன், மணிமேகலை, விசித்ரா மற்றும் வினிஷா ஆகிய நபர்கள் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் இரவில் ஓர் இடத்தில் கூடி நின்று பழனியை இந்த வருடம் திருவிழாவைப் பயன்படுத்தி அவனைக் கொன்று விடவேண்டும் என்றும் திட்டம் தீட்டியுள்ளதகாவும் கூறப்படுகிறது, அதனை தொடர்ந்து
புதன்கிழமை அன்று இரவு பழனி என்பவரை தகாத ஆபாச வார்த்தைகளாலும் திட்டியதோடு காலில் அணிந்திருத்த செருப்பை அடிக்க முயன்றுள்ளனர்
இதனை அருகில் இருந்தவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
ஊரின் உள்ளே உள்ள பழைய வீட்டின் திண்ணையில் பழனி அமர்ந்து இருந்துள்ள்ளார்
இதனை அறிந்த நபர்கள் பழனி தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு கத்தியை எடுத்து வந்து பழனி என்பவரை மணிகண்டன் என்பவர் மிரட்டி கொண்டிருக்கும் பொழுது மணிமேகலை
விசித்ரா, வினிஷா ஆகிய மூன்று பெண்களும் சேர்ந்து கீழே தள்ளிவிட்டு கை கால்களைப் பிடித்துக்கொண்டுள்ளனர்
இந்த சமயத்தில் நந்தக்குமார் மற்றும்
இளையராஜா ஆகிய இருவரும் அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான வாளை எடுத்து குத்த முயன்றனர் , மேலும் நந்தக்குமார் என்பர் அரிவாளால் வெட்டியுள்ளனர் இதை தடுத்த பழனி தலையில் வெட்டு மற்றும் கைகளால் தடுக்க முயன்றும் இளையராஜா வீசிய கத்தி
அவரின் இடது கண்ணீல் ஆழமான கீறல் பாய்ந்ததுடன் மூக்கு மற்றும் நெற்றிப் பகுதியிலும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்
ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிய பழனியை அருகில் இருந்தோர் மற்றும் அவரது மனைவி ரஞ்சனி மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் அங்கு பார்க்க இயலாததால் மருத்துவர்கள் முதலுதவி செய்து மதுரை அரசு மருத்துவமனையில் 108 உதவி மூலம் அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பழனி கழுத்தில் அணிந்திருந்த 5 பவன் சங்கிலி அற்றதில் பாதி எடுத்துச்சென்றுள்ளதாகவும் அங்கு உள்ள நபர்கள் கூறப்படுகிறது.

சாலைகிராமம் காவல்துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்று பிறகு விரைந்து சென்று
விசாரணை செய்து

1) நந்தகுமார் 25/24
த/பெ. கர்ணன்
வடக்கு வண்டல்

2) இளையராஜா 45/24
த/பெ. ராமசாமி
வடக்கு ஒன்றல்

3) மணிகண்டன் (என்கின்ற) மணிமாறன்
த/பெ. ராமசாமி
வடக்கு வண்டல்

Cr,no:86/24 U/s296(b),115(2),118(1),351(3),BNS and 4 of TNPHW Act

மேற்கண்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

‌‌

Leave a Reply

Your email address will not be published.