மதுரை மாநகரில் போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் மக்கள் நல உரிமைகள் கழகம் இணைந்து போதைப் பொருள்கள் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் “போதை இல்லா தமிழகம்” உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர், போக்குவரத்து காவல்துறையினர், மக்கள் நல உரிமைகள் கழக நிர்வாகிகள், மதுரை கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு போதை இல்லா தமிழகம் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.