
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட வல்லம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகேஷ் என்ற நாய் மகேஷ் ரவுடி, இவன் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அடிக்கடி குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான். எனவே இவனை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அரவிந்த் அவர்களின் பரிந்துரைப்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு கமல் கிஷோர் அவர்களின் உத்தரவுப்படி செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. K.S. பாலமுருகன் அவர்கள் மேற்படி ரவுடி மகேஷ் என்ற நாய் மகேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
