
உலக தாய் மொழி உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
இன்று (21.02.2025) மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் முனைவர். ஜெ.லோகநாதன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் “உலக தாய்மொழி உறுதிமொழியை” எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
