80 வயது மூதாட்டி பலாத்காரம்,நேபாள வாலிபர் சிறையிலடைப்பு.
அம்பத்தூர், தொழிற்பேட்டை தொலைபேசி இணைப்பகம் அருகில் சாலையோரம் வசித்து வருபவர் ராமாயி (80). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னசேலம். நேற்று முன்தினம் இரவு ராமாயி அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் நேபாள நாட்டை சேர்ந்த யோகேந்திரன் (35) என்பதும், அம்பத்தூர் தொழிற்பேட்டை, 8வது தெருவில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி பணியாற்றி வருவதும், குடிபோதையில் மூதாட்டியை பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.