பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது…!
கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டெப்ட்டி காமண்டன்ட் மீது வழக்குப்பதிவு செய்யபட்ட சம்பவம், காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரிடம் அத்துமீறிய காவல் அதிகாரி கைது செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் தற்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவலர்களுடன் ஊர்காவல்படை வீரர்கள் மற்றும் ஐ ஆர் பி என் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி ஐஆர்பிஎன் துணை கமாண்டன்ட் சுபாஷ் கொரோனா பாதுகாப்பு பணிக்காக திருபுவனை பகுதியில் பணி ஒதுக்கபட்டு இருந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் பணியில் இருந்த ஊர்காவல்படை பெண் போலீசாரிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டதாக சுபாஷ் மீது திருபுவனை காவல் நிலையத்தில் புகார் வந்தது. இதன் பேரில் திருபுவனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் டெப்டி காமண்டன்ட் சுபாஷ், பெண்ணிடம் ஆபாசமாக நடந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் தலைமையகம் உத்தரவின் பேரில், அவர் மீது 4 பிரிவின் கீழ் திருபுவனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்பு அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த டெப்ட்டி காமண்டன்ட் மீது வழக்குப்பதிவு செய்யபட்ட சம்பவம், காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.