கொரோனா பரவலை தடுக்க, முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவோரை போட்டோ எடுத்து அனுப்ப மதுரை காவல் ஆணையர் அறிவிப்பு
கொரோனா பரவலை தடுக்க மதுரை நகரில் முகக்கவசம் அணியாதவர்களை அவர்களின் இருப்பிடத்துடன் போட்டோ, அல்லது வீடியோ எடுத்து அனுப்பினால் முகக்கவசம் அணியாதவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.
மதுரை மாநகரில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது, இதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் மக்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனர் அபராதம் , வழக்கு என நடவடிக்கை எடுத்தாலும் திருந்த மாட்டேன் என்கின்றார்கள்.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக முகக்கவசம் அணியாதவர்களை போட்டோ, வீடியோ எடுத்து காவல் துறையினருக்கு அனுப்பலாம். என மதுரை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பொது மக்கள் யாருடனாவது பேசும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், அத்தியாவசிய தேவைக்காக கடைகளில் வரிசையில் நிற்கும் போது முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி நின்றாலோ, அவர்களின் இருப்பிடத்துடன் போட்டோ, அல்லது வீடியோ எடுத்து வாட்ஸ்அப் (8300021100) எண்ணுக்கோ, அல்லது மதுரை சிட்டி போலீஸ் முக நூல் பக்கத்திலோ பதிவிடலாம்.
முகக்கவசம் அணியாதவர், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதை மற்ற மாவட்டங்களும் கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா பரவலை தடுக்க முடியும்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி