மதுரை, ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்ற மூதாட்டி உட்பட 5 நபர் கைது, 2 கிலோ, 200 கிராம் கஞ்சா பறிமுதல்
மதுரை மாநகர் கரிமேடு C5, காவல் நிலையத்தில், காவல் நிலைய சார்பு ஆய்வாளர் M.சுந்தரபாண்டியன் அவர்கள் காவல் நிலையத்தில் அலுவல் சம்பந்தமாகஇருக்கும் போது, அவரது ரகசிய தகவலாளி காவல் நிலையத்தில் நேரில் வந்து ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை பற்றி கொடுத்த தகவலை பதிவு செய்து , அதன் பின் காவல் ஆய்வாளர் திரு. பாலமுருகன் அவர்களின் அனுமதி பெற்று சக காவலர்களுடன், மற்றும் ரகசிய தகவலாளியுடன் தக்க உபகரணங்களுடன் புறப்பட்டு 10 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றுசென்றனர் அங்கு கஞ்சா விற்கும் நபர்களை ரகசிய தகவலாளி அடையாளம் காட்டி மறைந்தவுடன் அங்கிருந்த ஐந்து நபர்களை சக காவலர்களின் உதவியுடன் 10.30 மணிக்கு மடக்கிப் பிடித்து விசாரித்ததில் அவர்கள் ஆரப்பாளையம் , கண்மாய் கரை பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மனைவி பஞ்சவர்ணம் வயது 81/2020, அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் மனைவி விஜயலெட்சுமி வயது 39/2020, செல்லூர் அருள்தாஸ்புரம் பகுதி நாகராஜ் மகன் விக்னேஷ் வயது 20/2020, பெத்தானியாபுரம் சேதுபதி மகன் கார்த்திக் வயது 22/2020, அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுந்தரபாண்டி என்ற சுண்டெலி என்பது தெரிய வந்தது. இவர்களில் பஞ்சவர்ணம் என்பவர் உசிலம்பட்டியிலிருந்து இனம் தெரியாத ஒரு நபரிடமிருந்து கஞ்சா எனும் போதை பொருளை வாங்கிக்கொண்டுவந்து வீட்டிற்குள் உட்கார்ந்து மற்ற நான்கு பேறும் சேர்ந்து சிறு, சிறு பொட்டலங்கலாக போட்டு TN 58 BC 9465 மற்றும் TN 58 AQ 3551 ஆகிய இரண்டு வாகனங்களில் ஏரியா, ஏரியாவாக சென்று விற்பனை செய்வதாக இருப்பதாக தங்களது குற்றத்தை ஒப்புக்கைண்டனர்.
அவர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து அவர்கள் மீது U/S 8(c) r/w 20 (b)(ii)(b) NDPS act ன்படி வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து கஞ்சா 2 கிலோ 200 கிராம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மேலே சொன்ன இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்தும் அவர்களை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதி மன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.