பொதுமக்களின் பாராட்டை பெற்ற அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
நேற்று 5 தேதி மதுரை மாநகர் அவணியாபுரம் பெரியார் சிலை அருகில் உள்ள சாலையில் மழையின் காரணத்தால் பள்ளங்கள் ஏற்பட்டு அதனால் பொதுமக்கள் சாலையில் பயணம் செய்ய மிகவும் சிரமப்பட்டனர் போக்குவரத்துக்கு இடையூறாகவும் ,விபத்துக்கள் ஏற்படுத்தும் வகையிலும் இருந்த இந்த பள்ளத்தை அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. செந்தில் குமார் அவர்கள் jcb மூலம் பள்ளத்தை நிரப்பி பொதுமக்கள் சாலையில் சாரமமின்றி பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ததால் பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து காவல் ஆய்வாளரை பாராட்டினார்கள்.