விருதுநகர் மாவட்டம்:-
திருவில்லி புத்தூரில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது…
திருவில்லிபுத்தூர் இந்திராநகரில் உள்ள சீனிவாசகபேரி கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இதில் காரைக்குடி, தூத்துக்குடி,சேலம், மதுரை, கோயம்புத்தூர், உள்பட 46 அணிகள் கலந்து கொண்டனர்.
இதில் முதல் பரிசு திருவில்லிபுத்தூர் இந்திராநகரின்
சீனிவாசகபேரி கிராமத்தில் உள்ள வீரையா நினைவு கபடி குழு பெற்றது.
இரண்டாம் பரிசு திருவில்லி புத்தூரில் உள்ள
கீழூர் தொட்டியபட்டி பிள்ளையார் நத்தம் கபடிகுழு பெற்றது.
தூத்துக்குடி கபடி குழுவானது மூன்றாம் பரிசினை தட்டிச்சென்றது.
நான்காம் பரிசினை
சிவகாசி தச்சகுடி கபடி குழு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு.கருத்தபாண்டி அவர்கள் நிகழ்ச்சியை ஊக்குவித்தார்.
மேலும் இந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
