Police Department News

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரிடம் காவல் ஆணையர் நலம் விசாரிப்பு: தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதி

கொள்ளையர்களின் தாக்குதலால் காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஐ.டி. பெண் ஊழியரை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். சென்னை அருகே நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருபவர் லாவண்யா ஜனத் (30). ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவர் பணி முடிந்து கடந்த 13-ம் தேதி இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பெரும்பாக்கம் – தாழம்பூர் சாலையில் […]

Police Department News

பெண் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் கைது

தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் கழுத்தை அறுத்து இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் திருப்போரூர் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அப்புமுருகன்(26) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி(35). இவருக்கும் திருப்போரூரை அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கருத்துவேறு பாடு காரணமாக கணவர் செல்வத்தை துளசி பிரிந்து சென்று, பெருங்களத்தூர் […]

Police Department News

நாமக்கல் மாவட்டம் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் & போலீஸ் இ நியூஸ் சார்பில்

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப் பள்ளிக்குரூ5000 கற்கும் இரண்டு havells fan நன்கொடை யாக வழங்கப்பட்டது மாவட்டத் தலைவர் டாக்டர் கே.சிவக்குமார் வழங்க பள்ளி யின் தலைமை ஆசிரியை பெற்றுக்கொள்ள உடன் ரிப்போர்ட் ட்ராக இணைய உள்ள டாக்டர் ஜெர்மன்.சண்முகசுந்தரம் மற்றும் எஸ்.சரவணன்

Police Department News

விருதுநகர் மாவட்டம் டீசல் கொள்ளையர்கள் கைது

  விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் சமீபகாலமாக வாகனங்களில் தொடர் டீசல் திருட்டு சம்பவம் காரியாபட்டி காவல் நிலையத்திற்கு புகார் வந்தது இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட டீசல் கொள்ளையர்களைகையும் களவுமாக பிடித்தார் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் திரு.ராமசந்திரன் அவர்கள் இவை மட்டும் அல்லாது இவர் குற்றபிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றும்போது பல குற்றங்களை கண்டுபிடித்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பையும் வெகுமதியும் பெற்றவர், மேலும் குற்றவாளிகளுக்கு மத்தியில் பெயரை கேட்டால் சிறிது நடுக்கம் காரணம் சிம்ம […]

Police Department News

CD மணி கூட்டாளிகளால் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளருக்கு மிரட்டல்?

போலீசாரால் தேடப்பட்டு வரும் தென் சென்னையின் பிரபல ரவுடி C.D. மணியின் கூட்டாளிகளால், தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் செல்போனில் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சட்டம் ஒழுங்கு ஆய்வாளரான கிரி, இரு தினங்களுக்கு முன், குற்றவழக்கு ஒன்றில் கணேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து, கணேசனின் தம்பியும், CD மணி என்ற ரவுடியின் கூட்டாளியுமான தவக்களை பிரகாஷ் என்பவன், ஆய்வாளர் கிரியை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தன் அண்ணனையே […]

Police Department News

மெரினா கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி: நிபுணர்கள் நேரில்ஆய்வு செய்தனர் குறித்து ஆய்வு செய்த தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஐ.ஜி அருணாச்சலம், டிஎஸ்பி பாலமுருகன் உள்ளிட்டோர்.

சென்னை மெரினா கடற்பரப்பில் கரை ஒதுங்கிய மர்மப் பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. போலீஸாரின் விசாரணையில் கடலில் மிதந்த பொருள் கப்பல்களில் பயன்படும் போயோ எனும் மிதவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. சென்னை மெரினா கடற்பரப்பில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் வழக்கம்போல் படகில் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நினைவிடங்களின் பின்புறப் பகுதியில் ராக்கெட் வடிவிலான மர்மப் பொருள் ஒன்று கடலில் மிதந்தது. இது […]

Police Department News

மதுரை அருகே மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் பஞ்சாலை தொழிலாளி கைது: மலையில் பதுங்கியிருந்தபோது போலீஸ் சுற்றி வளைத்தது

மதுரை அருகே காதலிக்க மறுத்ததால் திருமங்கலம் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்ற பஞ்சாலை தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்தவர் பாலமுருகன்(25). பத்தாம் வகுப்பு படித்துள்ள இவர் நடுவக்கோட்டை அருகே உள்ள திரளியில் இருக்கும் தனியார் பஞ்சாலையில் வேலை பார்க்கிறார். இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்துள்ளார். இந்த காதலை மாணவி ஏற்கவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் கடந்த ஆண்டு […]

Police Department News

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுகாரன்பாளையம் எனும் இடத்தில் காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே தண்டுகாரன்பாளையம் எனும் இடத்தில் (TN 37 CW 2301) லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது,அப்போது இளைஞர்கள் இருவர் தங்களது இருசக்கர வாகனத்தில்(TN 37 U 4797) சென்று கொண்டிருந்தன் மேலும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் (TN 37 CG 4105) ஒருவர் சென்று கொண்டிருந்தார்,அப்போது லாரியை கடந்து செல்ல முயலும்போது எதிரே வந்த வாகனம் உரசியதால் நிலைகுலைந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர் மேலும் பின்னால் வந்து கொண்டிருந்த லாரி […]

Police Department News

கள்ளத் துப்பாக்கி வழக்கில் வடமாநில இளைஞர் கைது: மேலும் சிலரைப் பிடிக்க தீவிர விசாரணை

கள்ளத் துப்பாக்கி வழக்கில் தொடர்புடைய இளைஞரை மத்திய பிரதேச மாநிலத்தில் கைது செய்த சிபிசிஐடி போலீஸார், அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருச்சியில் தங்கியிருந்து கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட முயன்ற சென்னை பேசின்பிரிட்ஜ் காவல் நிலைய காவலர் பரமேஸ்வரன்(32), அவரது உறவினரான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த குமார் மகன் நாகராஜ்(30), இடைத்தரகராக செயல்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவா(32) ஆகியோரை கடந்த மாதம் 27-ம் தேதி கன்டோன்மென்ட் போலீஸார் […]

Police Department News

12 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு: 1.செந்தில் வேலன், 2. அவினாஷ் குமார், 3. ராதிகா, 4. ஜெயகவுரி, 5. அஸ்ரா கார்க், 6.ஏ.ஜி.பாபு, 7.பி.கே.செந்தில்குமாரி, 8.ஏ.டி.துரைகுமார், 9.சி.மகேஷ்வரி, 10. ஆசியம்மாள், 11.லலித லட்சுமி, 12.என்.காமினி. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி […]