Police Department News

இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக சென்னை தேர்வு

தமிழகக் காவல்துறை பெண்களுக்கு எதிரான குற்றங்களை களைவதற்காகவும், தடுப்பதற்காகவும் எண்ணற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பயனாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியப் பெருநகரங்களிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான முதன்மை பெருநகரமாக சென்னையை அறிவித்துள்ளது பெருமைக்குரிய நிகழ்வாகும்

Police Department News

ஜெ.தீபா வீட்டின் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவின் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 3 ஆட்டோக்களில் சில மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள், தீபா பேரவை அலுவலகம் மற்றும் வீடு மீது கற்களை வீசினர். இதைப் பார்த்த அங்கிருந்த காவலாளிகள் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தனர். உடனே ஆட்டோவில் வந்த நபர்கள், ஆட்டோவிலேயே தப்பிச் சென்றனர். இது குறித்து தீபா பேரவை சார்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Police Department News

ரூ.20 டோக்கன் விவகாரம்: கொருக்குப்பேட்டையில் நடந்த மோதலில் 4 பேர் கைது

ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்து தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் ஜான்பீட்டரிடம் (35) சென்று, தங்களுக்கு 20 ரூபாய் […]

National Police News Police Department News

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க மாநகராட்சி பள்ளி மாணவி தேர்வு

இந்திய குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் கலந்து கொள்ள சென்னைப் பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தலைமையில் ஜன.26 அன்று புதுடில்லியில் நடைபெறுகின்ற 69-வது குடியரசு தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்க சைதாப்பேட்டையில் உள்ள சென்னைப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவி டி.ராமலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடக்கும் குடியரசு தினவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றது. குடியரசு தினமான ஜன.26 அன்று […]

Police Department News

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதியை மீட்டு மருத்துவமனை கொண்டு சேர்த்த மாவட்டக் கண்காணிப்பாளர்

விழுப்புரம்: கடந்த 22.12.2017 அன்று இரவு மாரிமுத்து மற்றும் அவரது மனைவி இருசாயி ஆகியோர் தங்கள் இரு சக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியிலிருந்து மூரார்பாளையம் நோக்கி செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்து காத்திருந்தனர். அந்த நேரத்தில் சங்கராபுரம் காவல்நிலையத்தில் ஆய்வு முடித்து விட்டு அவ்வழியாக […]

Police Department News

மதுரையில் (POCSO ACT) விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாநகர் கீரைத்துரை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.ரெஜினா அவர்கள் சார்பில் அருப்புகோட்டை நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சமூக குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளுதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பு சட்டம் (POCSO ACT) பற்றிய விளக்கம், சிறார்கொடுமை, குழந்தைக் கடத்தல், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புமுறை, இணையதள பயன்பாடு (முகநூல், வாட்ஸ்-அப்) மற்றும் இணையதள குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டன. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 2600 மாணவிகள் கலந்து கொண்டு […]

Police Department News

குடியிருப்புக்குள் புகுந்த 74 பாம்புகளை வனத்துறையினர் மீட்டு காட்டில் விட்டனர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த, பல்வேறு வகையான, 74 பாம்புகளை, வனத் துறையினர் பிடித்து, காப்புக் காட்டில் விட்டனர். கிருஷ்ணகிரி வனச்சரக எல்லைக்கு உட்பட்ட தட்டக்கல், காவேரிப்பட்டணம், பர்கூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில், நாகப் பாம்புகள், மலைப்பாம்புகள் புகுந்ததாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற வனத் துறையினர், ஒன்பது மலைப்பாம்புகள், ஒரு கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனர். கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர், நாகேஷ் கூறியதாவது: குடியிருப்பு பகுதிகளில், பாம்புகள் […]

Police Department News

சசிகுமார் கொலையில் தேடபட்ட குற்றவாளி கைது பழிக்குப்பழியாக செய்ததாக பரபரப்பு தகவல்

கோயம்புத்தூர்: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் ஓராண்டுக்கும் மேலாக தேடப்பட்டு வந்த முபாரக் என்பவர் கைது செய்யப்பட்டார். ஜன.9-ம் தேதி வரை அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சுப்பிரமணியம் பாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார்(36). இந்து முன்னணியின் மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்த இவர், கடந்த ஆண்டு செப்.22-ம் தேதி துடியலூர் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பையும், வன்முறையையும் ஏற்படுத்தியது. அதையடுத்து இந்த வழக்கு […]