
மதுரையில் ஏடிஎம் திருடன் கைது
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, திருமங்கலம் டவுன் காவல் நிலைய எல்லைக்குப்பட்ட பகுதியில் ATM-ல் பணம் எடுக்க சென்ற நபரிடம் அங்கிருந்த நபர் ஒருவர் உதவி செய்வது போல் நடித்து ஏமாற்றி அவரிடமிருந்து ATM கார்டை பெற்று அதற்கு பதிலாக வேறு ஒரு ATM கார்டு கொடுத்து பின்னர் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துள்ளார். இதை அறிந்த புகார்தாரர் கொடுத்த புகார் மனு அடிப்படையில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சார்பு ஆய்வாளர் திரு.மாரிக்கண்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டு பக்ருதீன் வயது 47 என்ற நபரை கைது செய்து, அவரிடமிருந்து பணம் 1,56,200-ஐ பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
