Police Department News

ராணிப்பேட்டையில் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய இருவர் சிறையில் அடைப்பு

ராணிப்பேட்டையில் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய இருவர் சிறையில் அடைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்ற ஆண்டு மொத்தம் 820 சாலை விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். சுமார் 1000 நபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட காவல்துறையின் சார்பில் சென்ற ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் இருந்து 15 சதவீதம் குறைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு சாலை விபத்து வழக்குகளை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான வழக்குகள் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படுகிறது என தெரியவருகிறது.
எனவே மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் திரு மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் 10.02.2020 ஆம் தேதி பிற்பகல் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்களின் அறிவுரையின்படி ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. s.திருநாவுக்கரசு மேற்பார்வையிலும் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு. s முத்து ஈஸ்வரன், திரு ,v கோவிந்தசாமி மற்றும் உடன் இருந்த காவலர்கள் சகிதம் வாகன தணிக்கை செய்தனர்.

வாகன தணிக்கையின் போது 1) மணிகண்டன், என்பவர் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டியதற்காக நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு 30 நாட்கள் சிறை தண்டனையும் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக ஒருவார காலம் சிறை தண்டனையும், 2) முத்து என்பவர் குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக நீதிமன்ற நடுவர் முன் ஆஜர் செய்யப்பட்டு 30 நாட்கள் நீதிமன்றக் காவல் பெறப்பட்டு இருவரும் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் முத்துவின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் பொதுமக்கள் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுவதனால் தங்களுக்கும் மட்டுமல்லாமல் தங்களால் மற்ற நபர்களுக்கும் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே பொதுமக்கள் மோட்டார் வாகன விதிகளை மதித்து செயல்படுமாறும், சாலை விபத்துக்களை குறைப்பதற்கும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு இளைஞர்களையும் பொதுமக்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் யாரேனும் மது குடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி நீதிமன்றம் மூலமாக சிறை தண்டனை மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்கள்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published.