பல்லாவரம் பகுதியில் வழிப்பறி செய்துவிட்டு கத்தியுடன் சுற்றி திரிந்த 2 சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை பல்லாவரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 4 பேரை போலீஸார் பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் ஒரே இரவில் வழிப்பறி செய்த 14 செல்போன்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பிடிபட்டவர்களில் 2 பேர் இளம் சிறார்கள் என்பது அதிர்ச்சியான உண்மை. இது பல்லாவரத்தில் மட்டுமல்ல சென்னையில் […]
Author: policeenews
கொள்ளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்த காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு
மதுரை: செயின் பறிப்பு மற்றும் செல்போன் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் நேதாஜி தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் வினித்குமார் (23) என்பவரை மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் திரு.பழனிசாமி (PC 3849) என்பவர் விரட்டி பிடித்து D1- தல்லாகுளம் குற்ற பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததற்காக மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் காவலரை வெகுவாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
லஞ்சப் புகாரில் சிக்கிய கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர்: பின்னணி விவரங்கள்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கிய விவரத்தின் பின்னணியில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டவர் கணபதி. பாரதியார் பல்கலைக்கழக பல்வேறு துறைகளில் 82 பணியிடங்கள் நிரப்ப 2016 ஆகஸ்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தொடர்புடையவை கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தர் லஞ்சப் புகாரில் சிக்கினார் நேர்முகத் தேர்வில் […]
வாக்கி டாக்கி கொள்முதல் முறைகேடு; டிஜிபி மீது நடவடிக்கை கோரி பொதுநல வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறைக்கு வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியிருந்தார். அதில் வாக்கி-டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரிய மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளதாக […]
இராஜஸ்தானில் கைதான நாதுராமை தமிழகத்தில் வைத்து விசாரணை
சென்னை: சென்னை கொளத்தூர் நகைக்கடையில் நடந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான பிரபல கொள்ளையன் நாதுராம் மற்றும் அவரது கூட்டாளிகளான பக்தாராம், தினேஷ்சவுத்ரி ஆகியோரை ராஜஸ்தான் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவரம் அறிந்தவுடன் தமிழக காவல்துறையினர் 3 பேரையும் சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். நாதுராம் உள்ளிட்ட 3 பேரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் 13-வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு கோபிநாத் அனுமதி அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் 3 […]
10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்தல் 4 பேர் கைது
நாகபட்டினம்: நாகை மாவட்டம் நாகூர் அருகே உள்ள வாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் மறித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் திட்டச்சேரி சாலையில் சென்றுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் வாகனத்தில் அந்த காரை விரட்டி சென்று திட்டச்சேரியை அடுத்த கொந்தை பகுதியில் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் சோதனை மேற்கொண்டபோது, அதில் சுமார் ரூ.1½ […]
வேறொருவரை காதலித்ததால் ஆத்திரம் காதலியை கற்பழித்த நபர்
சென்னை: குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம் பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நேற்று முன்தினம் இரவு குன்றத்தூர் காவல் ஆய்வாளர் சார்லஸ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அங்கு சாலையோரமாக மின் விளக்குகள் எதுவும் எரியாமல் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில் காரின் அருகே சென்று பார்த்தனர். காருக்குள் இளம்பெண் ஒருவர், ஆடைகள் கிழிந்த நிலையில் கதறி அழுதபடி இருந்தார். அவருக்கு அருகில் 2 வாலிபர்கள் சிரித்துக்கொண்டு இருந்தனர். காவல்துறையினரை கண்டதும் காரில் […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் அதிகாரிக்கு தேசிய விருது
மணிப்பூர் மாநிலம் கிழக்கு இம்பாலில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி கபீப். தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. இவர் மழுநேர பணியில் இறங்கி நிர்வாகத்தை சிறப்பாக செயலாற்றினார். இதனால் இவரை கௌவரவிக்கும் வகையில் சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்காக பாதுகாப்பு நிர்வாகத்தை திறம்பட கவனித்தார் என்ற வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ‘கபீப்’புக்கு தேசிய விருது வழங்கப்படுகிறது. தேசிய வாக்காளர் தினமான வருகிற 25–ந் தேதி டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் […]
திருமணம் ஆனதை மறைத்து கல்லூரி மாணவியை ஏமாற்றிய சென்னை போலீஸ்காரர் கைது
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள அயோத்திபட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (22). இவர் சென்னை ஆயுதப் படையில் பணிபுரிகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரைக் காதலித்தார். அவரிடம் திருமண ஆசை காட்டி நெருங்கி பழகினார். இதற்கிடையில், செல்வக்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். இதுபற்றி தெரியாத மாணவி, தன்னை திருமணம் செய்யும்படி வற்புறுத்தியதால் அவரையும் செல்வக்குமார் திருமணம் செய்துவிட்டு பெற்றோர் வீட்டில் விட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக மாணவியைப் பார்க்க […]
வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு காவல்துறையின் ஆலோசனைகள்
பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் சில சமயங்களில் எதிர்பாராத வகையில் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அடையாளம் தெரியாதவர்கள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதும், அவற்றை தடுக்கவரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்களை கேள்விப்பட்டு வருகிறோம். மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் எச்சரிக்கையுடன் […]