கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை தனது கண்களாகவும், தான் பணிபுரியும் இடத்தை இறை குடியிருக்கும் இல்லமாக நினைத்து காக்கி சீருடையின் தன்மானம் காத்து, மக்கள் நலனை பாதுகாக்க குற்றவாளிகளை வேட்டையாடும் வேட்டையில் களம் பல கண்ட வேங்கையாக வலிமை மிக்க காவல்துறை பணியில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் மன நிறைகளுடன் தூக்கத்தை இலந்த விழிகளுடன் துயரங்கள் ஆயிரம் தங்கள் வாழ்வில் இருந்தாலும் வாழும் மக்களை காக்கும் எல்லை சாமியாக வலம் வந்து நலம் நல்கும் எங்கள் குல […]
Day: December 25, 2017
உண்டியலை உடைத்து திருட முயற்சி தப்பி ஓடும்போது மாட்டிய திருடர்கள்
காஞ்சிபுரம்: காஞ்சீபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் காவல் உதவி-ஆய்வாளர் செந்தில்வேல் மற்றும் காவல்துறையினர்ூ தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மரக்காணம் பகுதியை சேர்ந்த சுதாகர் (31) ஆனந்த்(23) மற்றும் பாண்டியன் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கல்பாக்கத்தை அடுத்த கூவத்தூர் கிராமத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோவில் உண்டிலை உடைக்க முயன்றபோது அலாரம் […]
தருமபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் பொன்விழா ஆண்டு கண்காட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கண்காட்சி திறப்பு விழாவிற்கு காவல் கண்காணிப்பாளர் திரு.பண்டிகங்காதர் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் முன்னிலை வகித்தார். விழாவில் கலெக்டர் விவேகானந்தன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் காவல்துறையினர் பயன்படுத்தும் துப்பாக்கிகள், தீயணைப்பு கருவிகள், வெடிபொருட்களை கண்டறியும் உபகரணங்கள், காவல்துறையில் பயன்படுத்தப்படும் புலன் விசாரணை பொருட்கள் மற்றும் […]
கும்பகோணம் , உத்திரை கிராமத்தில் வீட்டில் வைத்து மது விற்பனை, 1 கைது
தஞ்சாவூர்: கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை காவல் நிலைய சரகத்திற்க்குட்பட்ட உத்திரை கிராமம் மெயின் ரோடு விநாயகர் கோவில் அருகில் வசித்து வரும் பழனிசாமி மகன் ரஜினிகாந்த் (30) என்பவர் தனது வீட்டில் மது பாட்டில்களை விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் ரேகாராணி உத்திரவின் படி உதவி ஆய்வாளர் குகன் மற்றும் காவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தினர்கள் விசாரணையில் அங்கு மது விற்பனை செய்து வருவது தெரியவந்தது இதையடுத்து சுவாமிமலை காவல் துறையினர் […]