புத்தாண்டையொட்டி 31-ம் தேதி இரவில் 368 இடங்களில் வாகன சோதனை செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் நடப்பதற்கு சென்னை காவல் துறை அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். டிசம்பர் 31-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து சென்னையில் […]
Day: December 29, 2017
புத்தாண்டு தினத்தில் அமைதியை காக்க காவல்துறையினர் நடவடிக்கை
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் சார்பில் சிறப்பு வாகன தணிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன தணிக்கையில் ஈடுபட உள்ள காவல்துறையினருக்கு, மதுபோதையை கண்டறியும் சுவாச பரிசோதனை கருவி, அதி வேகத்தை அளவிட்டு காட்டும் கருவி ஆகியவற்றை எப்படி உபயோகிப்பது? என்பது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. நேற்று நடந்த இந்த பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொழில்நுட்ப பிரிவு காவல் ஆய்வாளர் கணேசன், […]
மதுரையில் போலி மது பாட்டில்கள் தயார்செய்தவர் கைது
மதுரை: 27.12.2017 D1 – தல்லாகுளம் ச&ஒ காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் திரு.அழகுமுத்து, தலைமை காவலர் (626) திரு.செந்தில் குமார், முதல் நிலை காவலர் (1204) திரு.ஸ்ரீமுருகன் ஆகியோர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது தபால்தந்திநகர், மிலிட்டரி கேண்டீன் அருகே உள்ள பெட்டிகடை அருகில் கட்டைப்பையுடன் நின்றிருந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தபோது அதில் 5 மது பாட்டில்கள் (750 ஆடு) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் விசாரணை செய்தபோது தனது பெயர் லிங்கனாண்டி (60) என […]
கஞ்சா விற்பனை செய்த ஒருவர் கைது
மதுரை: மதுரையில் 27.12.2017 ம் தேதி இரவு ஊ5 கரிமேடு சரூஒ காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் என்பவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி தனது ரோந்து காவலர்களுடன் சென்று ராஜாங்கம் வயது (70) மதுரை என்ற முகவரியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்தவரை கைது செய்து அவரிடம் இருந்து 1. 200 kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு எதிரியை இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
பல இடங்களாக கஞ்சா வற்பனை செய்தவர்கள் தூத்துக்குடி காவல்துறையினரிடம் சிக்கினர்
தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருந்து வருவதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கார் மூலம் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் முரளிதரன், ஆய்வாளர் மலர்க்கொடி ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் […]
பிரபல கொள்ளையன் கொலை வழக்கில் கள்ளக்காதலி கைது பரபரப்பு தகவல்கள்
சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள முத்தம்பட்டி சி.எஸ்.சி. நகரை சேர்ந்தவர் விஜயன் என்கிற விஜயகுமார்(29). பிரபல கொள்ளையனான இவர் மீது சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 15-க்கும் மேற்பட்ட வழிப்பறி, கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. கடைசியாக விஜயகுமாரை வாழப்பாடி காவல்துறையினர் ஒரு கொள்ளை வழக்கில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 19-ந் தேதி அவர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். […]