விருதுநகர் மாவட்டம்:-
அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் சந்திப்புகூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் Projector மூலம் சந்தேகப்படும் குற்றவாளிகளை எளிதில் கண்டுகொள்ள உதவும் cctns portal மற்றும் அதற்கான பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியின் மூலமாக இரவுரோந்து செல்லும் காவல் துறை அதிகாரிகள் ஆளிநர்கள் சந்தேகப்படும் நபர்கள் மற்றும் குற்றவாளிகள் என மேற்படி செயலியின் மூலமாக அடையாளம் எளிதில் காணமுடியும்.
அத்துடன் இதில் இருக்ககூடிய முக்கிய சிறப்பம்சங்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என. அதிகாரிகள் மத்தியில் எடுத்துரைக்கப்பட்டது.
மிகமுக்கியமான இந்த நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை காவல் துறை துணை உட்கோட்டத்தில் பணியாற்றும் அனைத்து காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு,குற்றப்பிரிவுமற்றும் போக்குவரத்து காவல் துறையினர் என பலரும் பங்கேற்றனர்.
