

மதுரை – பசுமலை, C. S. I, பள்ளியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு சாலை போக்குவரத்து விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை அருகே பசுமலை. C. S. I. பள்ளியில் மதுரைமாநகர் போக்குவரத்து காவல்துறை பிரிவுனர், சாலைவிழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த பிரச்சாரத்தை மதுரைமாநகர் திருப்பரங்குன்றம் சரகம் போக்குவரத்து காவல் ஆய்வாளர், திரு. பூர்ணகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைத்து பேசியது.
சாலையில் இரு பக்கம் பார்த்து சாலையில் கடந்து செல்ல வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, வாகன ஒட்டிகள் தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும்.
ஆய்வாளர் பேசும் போது மாணவர் இடம் இரு சக்கர வாகனம் ஒட்டும் போது அவசியம் தலைகவசம் கட்டாயம் அணியவேண்டும்.
மாணவ மாணவிகள்,18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனத்தை தனியாக இயக்க கூடாது.
போதுவாக மதுபோதையில் இரு சக்கர வாகனங்களை, நாம் இயக்கினால் சாலையில் விபத்து நேரிடலாம். அதனால் மாணவ மாணவிகள் தங்கள், தந்தை மற்றும் உறவினர்கள் இடம் சாலை விழிப்புணர்வு பற்றியும் தெரிவிக்க வேண்டும்.
ஆகவே மாணவ மாணவிகள் விழிப்புடன் இருப்பதுடன் சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டும், என்றார்.
இந்த நிகழ்ச்சியில் C. S. I. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் மற்றும் மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் சரகம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், திரு. திலகர் அவர்கள், மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. ரவிஅவர்கள், மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
