
மதுரை பெரியார் பஸ் ஸ்டான்ட் பகுதியில் செய்தி தாள் பார்சலை திருடியவர்கள் கைது
மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் தீயணைப்பு நிலைய பகுதியில் செய்தித்தாள் பார்சல்களை திருடியவர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்தவர் பாலாஜி வயது 48. இவர் 15 ஆண்டுகளாக நாளிதழ்கள் விற்கும் முகவராக உள்ளார். தினமும் இவர் வினியோகம் செய்ய வேண்டிய செய்தித்தாள் பார்சல்கள் பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே நள்ளிரவு 3:00 மணிக்கு வரும். நேற்று காலை வந்து இறங்கிய பார்சல்களை காணவில்லை.
அவர் அளித்த புகாரின் பேரில் திடீர் நகர் சார்பு ஆய்வாளர் திரு. கதிரேசன் அவர்கள் விசாரணையில் செல்லுார் போஸ் வீதி இருக்கன்குடி மாரியம்மன் கோவிவ் தெருவை சேர்ந்த கரிகாலன் வயது 28/22 மற்றும் சிவகாமி தெருவை சேர்ந்த பாண்டி மகன் மாறன் வயது 22/22 ஆகியோர் டூவீலரில் வந்து பார்சல்களை திருடிச் சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து பார்சல்களை பறிமுதல் செய்தனர்
