ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் முள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர் சவுதியில் மீன் பிடி தொழில் செய்தவரை காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்கும் படி கலெக்டர் விஷ்ணுசந்திரனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முள்ளிமுனை பகுதியை சேர்ந்தவர் சமயகாந்த் 32, திருமணமானவர் இவருக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர். சவுதியில் அல்சுபைல் என்ற இடத்தில் மீன் பிடி தொழிலில் கூலியாகபணிபுரிந்தார்.
இவர் நவ.9 ல் கடலுக்கு சென்றுவிட்டு கரைக்கு வந்தவர் இரவு 9:00 மணியளவில் வெளியில் கடைவீதிக்கு சென்றவர் இன்று வரை திரும்பவில்லை. என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை.
காணாமல் போனவரை அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து முறையாக அங்குள்ள போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த தகவலும் கிடைக்கவில்லை.
காணாமல் போன சமயகாந்துக்கு நந்தினி 29 என்ற மனைவியும், 10, 8 வயதில் இரு மகள்களும், மூன்றரை வயதான ஆண்குழந்தையும் உள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுத்து சவுதியில் காணாமல் போன மீனவரை மீட்டு தர வேண்டும், என கடல் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.