
ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி: 3 பேர் கைது
மதுரை – பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து சிலைமான் ரயில் நிலையத்திற்கு ஆட்டோவில் சென்ற ஹி மாண்பு மதுகர் விமலிடம் வழிப்பறி செய்துள்ளனர்.
கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி செல்போன், பணத்தை கொள்ளையடித்த மதுரையைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் (20), வசந்தகுமார் (20), வாசுதேவன் (16) ஆகியோரை திருப்புவனம் போலீஸ் கைது செய்தது.
