
மனைவியை தாக்கியவர் கைது
மதுரை தத்தனேரி பாக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி வயது (48) இவரது மனைவி காளீஸ்வரி வயது (36) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே ஆசைத்தம்பி அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்படி சம்பவத்தன்று அதிக போதையில் வந்த அவர் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை காளீஸ்வரி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசை தம்பி கத்தியை எடுத்து மனைவியை குத்தியுள்ளார். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிந்து ஆசை தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
