Police Recruitment

உயிரை காப்பாற்றிய மடிப்பாக்கம் HC போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் அவர்கள்

உயிரை காப்பாற்றிய மடிப்பாக்கம் HC போக்குவரத்து காவலர் திரு.ராம்குமார் அவர்கள்

25.09.2020 மதியம் சுமார் 12.00 மணியளவில் கோவிலம்பாக்கம் சிக்னலில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த வாலிபர் நன்மங்கலத்தில் இருந்து மடிப்பாக்கம் சிக்னலை கடந்து போகும்போது திடீரென்று கார் திரும்போது இரண்டு சக்கர வாகனத்தை உராசியதால் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த நபர் கீழே விழுந்தார் கார் இடித்தது பாராமல் சென்று விட்டனர்.உடனே அங்கிருந்த HC ராம்குமார் போக்குவரத்து காவலர் அவர்கள் கீழே விழுந்த நபரை தூக்கி தண்ணீர் கொடுத்து காயங்களை துடைத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தபின் அந்த நபரிடம் சாலை விதிகளை பற்றியும் மற்றும் பல நன்மையான அறிவுரைகளை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.அந்தநபரின் பெயர் சரண் கல்லூரியில் படிக்கிறார் என்பதனை மருத்துவமனை பதிவேட்டில் தெரியவந்தது. இப்படியும் திரு.HC ராம்குமார் அவர்கள் போக்குவரத்து காவலர்களுக்கு உதாரணமாக திகழ்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.