துரிதமாக செயல்பட்டு ஆள் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து நபர்களை கைது செய்த திண்டுக்கல் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீசார்.
நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்த தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாவூர் டேம் அணை செல்லும் பகுதி அருகே, நாமக்கல் பகுதியிலிருந்து பொன்னுசாமி என்பவரை காரில் கடத்தி வந்த ஈரோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், ஜீவா, சரவணன், கவின்குமார், மற்றும் அரவிந்த் ஆகிய 05 நபர்களையும் திண்டுக்கல் மாவட்ட அம்மையநாயக்கனூர் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த
SSI திரு.கருப்பையா,
Gr-1 PC திரு. பெருமாள் திரு. சத்யராஜ் மற்றும் AR PC திரு.அழகு முருகன் ஆகியோர் கைது செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் ஆய்வாளர் திருமதி.லாவண்யா அவர்கள் விசாரணை மேற்கொண்டு நாமக்கல் மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்பு அவர்களிடம் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்களும் கடத்தப்பட்ட நபரையும் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து ரோந்து பணியில் துரித விசாரணையில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 5 நபர்களை கைது செய்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரை, தென் மண்டல காவல்துறை தலைவர் முனைவர் சி. முருகன் இ.கா.ப அவர்கள் நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்தார்.