மெரினா கடற்கரையில் திடீர் போராட்டம் நடத்திய 4 பெண்கள் உள்ளிட்ட 18 பேரை போலீஸார் கைது செய்தனர். பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி உள்ளிட்ட விஷயங்களை காவல் ஆணையர் மெரினாவில் நேரில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்டுவதால் தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு எழுச்சி போல் மீண்டும் இளைஞர்கள் திரள வாய்ப்புள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததன் பேரில் போலீஸார் பாதுகாப்பு மெரினாவில் […]
Author: policeenews
குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலையில் உள்ள மண்ணரை என்னும் ஊரில் குடிநீர் தட்டுபாடு இருப்தால் மக்கள் பேரும் அவதிப் படுகிறார்கள் எனவே கோவம் அடைந்த பொதுமக்கள் தண்ணீர் குடதுடன் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர் நல்லூர் காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பொதுமக்களை சமாதானம் செய்தனர் பின்னர் பொது மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர் Police e News Reporter K.RAMESH
சூடுபிடிக்கும் பழனி சிலை விவகாரம் – கோவிலின் இணை ஆணையரிடம், ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய சிலை பிரதிஷ்டை செய்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நேற்று பழநி வந்தனர். மேலும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான நவபாஷாண சிலையைக் கடத்த முயற்சி நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். முருகப் பெருமானின் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் 2004-ல் கருவறையில் உள்ள நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நவபாஷாண […]
ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேர் கைது
சென்னை ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் காணாமல் போனது. இப்பகுதி கண்காணிப்புக் காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது அடுக்கு மாடிக் குடியிருப்பின் முன்னாள் காவலாளியான ஜெகதீசன் என்பவர் வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசனினின் செல்ஃபோன் சிக்னல்களை ஆய்வு செய்த போது அவர் கும்பகோணத்தில் இருந்தது தெரியவந்தது. கும்பகோணத்தில் லாட்ஜ் […]
IT நிறுவன ஊழியர்கள் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த 2 கொள்ளையர்கள் கைது
சென்னையில் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த, வேலூர் மாவட்ட கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜிவ்காந்தி சாலை, கண்ணகி நகர், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேப்டாப், இருசக்கர வாகனங்கள், நகைகள் திருட்டு குறித்து தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து குற்றவாளிகளைத் தேடி வந்த கண்ணகி நகர் போலீசார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 2 இருசக்கர வாகனங்கள், 2 லேப்டாப்கள், 5 சவரன் […]
சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது
சென்னையில் கடைக்கு சாக்லெட் வாங்க சென்ற 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மளிகை கடைக்காரரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர்.. இந்த கொடுமைக்கு உள்ளான சிறுமி வயிறு வலிப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் பிறப்புறுப்பில் ரத்த காயம் இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதோ ஒரு மனித மிருகம் பாலியல் கொடுமை செய்திருப்பது தெரிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். […]
சென்னை விருகம்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய சபிலால் நேபாளத்தில் கைது
சென்னை ஆற்காடு சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கொள்ளை வழக்கில் தொடர்புடைய சபிலால் சந்த் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளான். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த திங்கட் கிழமையன்று லாக்கர்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. லாக்கர் அறையின் இரும்புக் கதவை கேஸ்வெல்டிங் வைத்து துளையிட்ட கொள்ளையர்கள், லாக்கர்களையும் வெல்டிங் வைத்து உடைத்தனர். கேஸ் தீர்ந்து விட்டதால் இரு லாக்கர்களை மட்டும் உடைத்து அதிலிருந்த சுமார் 100 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினர். […]
தேர்வு எழுத காரணமாக இருந்த இரண்டு காவலர்களையும் அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் சரகம் கொந்தாமூர் கிராமத்தில் உள்ளஅரசு மேல் நிலை பள்ளியில் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அரசுதேர்வு பணிக்கு சென்ற Gr I,pc 501 மதன் என்பவரிடம் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி தேர்வு 10:00 மணிக்கு துவங்க உள்ள நிலையில், தேர்வு எழுத வேண்டிய +1 இயற்பியல் படிக்கும் மோனிஷ் என்ற மாணவன் மட்டும் நேரம் 9:50 ஆகியும் இன்னும் வரவில்லை என்று கூறினார். உடனே காவலர் மதன் மாணவரின் விலாசம் […]
காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு
காவலரை பற்றி ஒரு இளைஞன் பதிவிட்ட பதிவு: என் இருசக்கர வாகனம் எரிபொருள் இல்லாமல் தீவு திடல் அருகே நின்று விட்டது. அங்கே போக்குவரத்து காவல் பணியில் இருந்த திரு.தாமோதரன் அவர்கள் என்னை அழைத்து நடத்திய விதம் மிக மிக அருமை, இப்படியும் போக்குவரத்து காவலர்கள் உள்ளனர் என்று மனம் குளிர்ச்சி அடைகிறது. அவர் சிறிது நேரம் கூட என்னை வெயிலில் நிற்க விடவில்லை, அக்கறையோடு பேசினார், அதுபோக தன்னுடைய வாகனத்தில் இருந்து எரிபொருள் எடுத்து தருகிறேன் […]
சென்னையில் இருசக்கர வாகன திருடர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது காவல்துறை:
சென்னையில் இருசக்கர வாகன திருடர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது காவல்துறை: நாசர் ஷாரிப் என்பவரின் இரு சக்கர வாகனம் திருட்டு போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து M. K. B. நகர் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் மூன்று திருடர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் வாகன திருடர்களை காவல்துறை தொடர்ந்து வேட்டையாடுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது