கல்லூரி மாணவி அஸ்வினி கொலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்திக் கொண்டிருந்த தி.நகர் துணை ஆணையரிடம் நான் யார் தெரியுமா? என்று பந்தா காட்டிய போலி நிருபரை போலீஸார் கைது செய்தனர். சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரியில் மாணவி அஸ்வினியை அவரது முன்னாள் காதலர் அழகேசன் கொலை செய்தார். அனைவரையும் பதற்றப்பட வைத்த இந்த சம்பவத்தில் போலீஸார் மிகுந்த பதற்றத்துடன் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். சம்பவ இடத்தில் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர், தி.நகர் துணை ஆணையர் […]
Author: policeenews
ராஜீவ் காந்தி கொலை கைதி பாதுகாப்புடன் சுவாமி தரிசனம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்தவர் பொய்யாழி. இவரது மனைவி சந்திரா. இவர்களது மூத்த மகன் ரவிச்சந்திரன்(49). இவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் கடந்த 26 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளார். இவர் சொத்து பிரிப்பது தொடர்பாக தற்போது பரோலில் (விடுமுறை) வந்துள்ளார். […]
ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்க வைத்தேன்; காதலித்து விலகியதால் ஆத்திரம் அடைந்தேன்: அஸ்வினி கொலைவழக்கில் கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
ரூ.2 லட்சம் செலவு செய்து படிக்கவைத்த பிறகு காதலித்து விலகியதால் ஆத்திரமடைந்து மாணவி அஸ்வினியை கொலை செய்ததாக அழகேசன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அஸ்வினி கொலை வழக்கு தொடர்பாக கைதாகியுள்ள அழகேசன், போலீஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: அஸ்வினியும் நானும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை தற்செயலாக பார்த்தேன். முதல் பார்வையிலேயே அவரிடம் மனதை பறிகொடுத்தேன். அவரை எப்படியாவது திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என ஆசைப்பட்டேன். அஸ்வினியைப் பார்க்க […]
நோயுற்ற குழந்தையைப் பார்க்க லீவு கிடையாது; என்ன பிழைப்பு இது? கண்ணீருடன் பேசும் காவலர்: வைரலாகும் வீடியோ
தனது காலுடைந்த குழந்தையை பார்க்க லீவு தர மறுக்கும் அதிகாரி பற்றி கண்ணீர் வழிய பேசும் கான்ஸ்டபிள் ஒருவரின் முகநூல் பதிவு வீடியோ வைரலாகி வருகிறது. என்ன பிழைப்பு இது எதாவது பெட்டிக்கடை வைத்தாவது பிழைத்துக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமோனி இதற்கு முன்னர் வேறொரு மாவட்டத்தில் எஸ்.பியாக இருந்தபோது தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஒரு காவலரை நேரில் சென்று கட்டி அணைத்து அவரை தேற்றி ஆறுதல் சொல்லி எதுவானாலும் இனி நீ […]
ரூ.390 கோடியில் 82 புதிய திட்டங்கள்; ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அறிவிப்பு- 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் விருது சென்னை மாநகரட்சி ஆணையர் கார்த்திகேயன், சிறந்த காவல் ஆணையரகத்துக்காக சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருக்கு கேடயம் வழங்கி முதல்வர் பாராட்டினார்.
தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் ரூ.390 கோடி மதிப்பிலான புதிய பாலங்கள், குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 82 திட்டங்களை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர்கள் மாநாட்டில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 3 நாள் மாநாடு நேற்றுடன் நிறைவு பெற்றது. நிறைவு விழாவில், முதல்வர் கே.பழனிசாமி பேசியதாவது: அரியலூரில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்படும். பெரம்பலூர், சின்ன முட்லூ பகுதியில் […]
பெரியார் சிலை தொடர்பான சர்ச்சை கருத்து: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு- தபெதிகவை சேர்ந்த 3 பேர் கைது
கோவையில் பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து கோவை மாநகர போலீஸார் விசாரிக்கின்றனர். திரிபுராவில் லெனின் சிலை இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்திலும் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது. இதையடுத்து கோவையில் 6 இடங்களில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிகாலையில் தாக்குதல் இந்நிலையில், நேற்று அதிகாலை 3.50 மணியளவில் […]
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் பரோலில் வந்தார்: அருப்புக்கோட்டையில் 155 போலீஸார் பாதுகாப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி ரவிச்சந்திரன் 15 நாள் (பரோல்) விடுமுறையில் அருப்புக்கோட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு வந்தார். அவருக்கு டிஎஸ்பி தலைமையில் 155 போலீஸார் பாதுகாப்பு அளிக்கின்றனர். அருப்புக்கோட்டை மீனாம்பிகை நகரைச் சேர்ந்த பொய்யாழி – சந்திரா தம்பதியின் மூத்த மகன் ரவிச்சந்திரன்(48). முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் […]
ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்: தோழியுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தால் கணவர் கைது
கணவரின் கூடா நட்பாலும், வரதட்சணைக் கொடுமையாலும் ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண் விவகாரத்தில், கணவரின் தோழியுடன் பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து கணவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஜீவிதா என்ற மகளும், முரளி என்ற மகனும் உள்ளனர். ஜீவிதா வானகரம் பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். ஜீவிதாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் ஐ.டி.யில் பணிபுரியும் ரோஸ் என்பவருக்கும் […]
சென்னையில் அதிர்ச்சி: காவல் நிலைய வாசலில் எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டுகொண்டு தற்கொலை
சென்னை அயனாவரத்தில் காவல் நிலைய வாசலிலேயே எஸ்.ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்பாக்கம் துணை ஆணையர் எல்லையின் கீழ் வரும் அயனாவரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ) பணியாற்றி வந்தவர் சதீஷ்குமார்(33). பணியில் சிறப்பாக செயல்பட்டவர் சதீஷ்குமார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியிலுள்ள மேலையூர் ஆகும். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இவர் நேற்று நள்ளிரவு தான் பணியாற்றும் ஸ்டேஷனுக்கு சாதாரண உடையில் […]
மதுரை மாவட்ட செய்திகள்} நடுரோட்டில் பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
{ மதுரை, மதுரை திருநகர் அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரது மனைவி முத்துலட்சுமி (வயது 27). நேற்று திருப்பரங்குன்றம் சாலை மதுரை கல்லூரி எதிரே நின்று கொண்டிருந்த முத்துலட்சுமியை ஒருவர் வழிமறித்து தகராறு செய்தார். பின்னர் அவர் திடீரென்று கையில் வைத்திருந்த அரிவாளால் முத்துலட்சுமி சரமாரியாக வெட்டினார். அப்போது அப்பகுதி பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக தாக்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரத்த வெள்ளத்தில் இருந்த முத்துலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு […]