மேட்டுப்பாளையம் காவல் துறை சார்பாக இன்று 29.04.2020 நெல்லித்துறை, விழாமரத்தூர், பூதபள்ளம், செங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்று மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையம்_காவல்துறைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்……. முன்னுதாரணமான உங்களைப் பெற்றிருப்பதில் மேட்டுப்பாளையம் பெருமை கொள்கிறது. தொடரட்டும் உங்கள் நற்செயல்களும் அர்ப்பணிப்புகளும்.. போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்
Author: policeenews
காவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங்க் மாத்திரைகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார்
காவலர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங்க் மாத்திரைகள் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை காவல் ஆணையர் அவர்கள் வழங்கினார். 28.04.2020-ம் தேதி மதுரை மாநகரில் பணிபுரியும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநகர்களுக்கு வழங்கும்படி மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஜிங்க் மாத்திரைகள் (zinc tablets), மல்டி வைட்டமின் மாத்திரைகள் (multivitamin tablets), கப சுர குடிநீர் சூரணங்கள் ஆகியவற்றை […]
சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சட்டவிரோதமாக கள்ள சாராயம் காய்ச்சி வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்டம் சாலைகிராமம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பாப்பா மடையைச் சேர்ந்த ஜெகஜீவன் என்பவர் சாராயம் காய்ச்சுவதாக போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சாலைகிராமம் ஆய்வாளர் திருமதி. வசந்தி அவர்களின் தலைமையில் போலீசார் சோதனை செய்ததில் வீட்டின் பின்புறம் சாராயம் காய்ச்சிய மேற்படி நபர் மீது u/s.4(1) (a) (g) (A) TNP ACt – ன் கீழ் வழக்குப்பதிந்து கைது […]
200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு
200 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி ராமதண்டலம் அருகே ஓடையில் நடந்த சோதனையில் சுமார் 200 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் தயாரிப்பதற்கான உபகரணங்களை காவல்துறையினர் அழித்தனர்.
மழை புயல் வெயில் மழை என்று பார்க்காமல் பொது மக்களுக்காக உழைக்கும்
மழை புயல் வெயில் மழை என்று பார்க்காமல் பொது மக்களுக்காக உழைக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி இடம் சென்னை ஸ்பென்சர் பிளாசா எதிரில் போலீஸ் நியூஸ்சென்னை ரிப்போரட்டர் சுகன்
ஏழை எளிய மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களை தானமாக வழங்கிய மதுரை மாவட்ட போலீசார்.
ஏழை எளிய மக்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களை தானமாக வழங்கிய மதுரை மாவட்ட போலீசார். மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் சுமார் 200 பேருக்கு, மதுரை சரக DIG திருமதி ஆனி விஜயா IPS அவர்கள் தலைமையிலான போலீசார் மற்றும் தனியார் நிறுவன உதவியுடன் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி மேலும் அவர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி
வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவல்துறையின் ஓவியப்போட்டி வீட்டில் இருக்கும் தங்களது குழந்தைகளின் ஓவியத்திறமையினை கொண்டு கொரோனாவினை எதிர்க்கலாம். ஒரு A4 தாளில் “கொரோனாவிற்கு எதிரான போர்” என்ற தலைப்பில் ஓவியங்களை வரைந்து ஏப்ரல் 26-ம் தேதிக்குள் எங்களுக்கு புகைப்படம் எடுத்து சுயவிவரங்களுடன் அனுப்பி வையுங்கள். சிறந்த ஓவியம் தமிழ்நாடு காவல்துறையின் முகநூல் பக்கத்தில் ஏப்ரல் 29-ம் தேதி பதிவிடப்படும். ஓவியங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி tnpcontest@gmail.com. மேலும் உங்களது குழந்தையின் பெயரை […]
ஊத்தங்கரையில் காவல்துறை சார்பில் நல உதவிகள்.
ஊத்தங்கரையில் காவல்துறை சார்பில் நல உதவிகள். கொரனோ தொற்று நோய் பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஊத்தங்கரையில் வசிக்கும் திருநங்கைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜ பாண்டியன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். பெருகோபனபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முரளிதரன் அரிசி காய்கறி பழங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரம் பெருமளவு […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்!
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்! கடையநல்லூர் காவல் நிலையத்தில் டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் ரமலான் மாதத்தில் மக்கள் வீடுகளிலே தொழவேண்டும் மற்றும் கஞ்சி பள்ளிவாசலில் வினியோகம் கூடாது.. மேலும் இரவுத் தொழுகையை பள்ளிகளில் தொழ வேண்டாம் என்று நிர்வாகிகளை டிஎஸ்பி சக்திவேல் அவர்கள் கேட்டு கொண்டார்.









