வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட காளனம்பட்டியில் வாக்களிக்க வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளியை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவர் சுமந்து சென்று வாக்களிக்க உதவினார். திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது. வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட குளத்தூர் ஊராட்சியிலுள்ள காளனம்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க இளம்வயதில் போலியோ பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளி ஒருவர் வந்தார். கிருஷ்ணசாமி என்ற அந்த நபர் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கி வாக்குச்சாவடிக்கு கை, கால்களை ஊன்றியபடி தவழ்ந்து சென்றார். அவரைப்பார்த்த பாதுகாப்புப் […]
Author: policeenews
இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்
மக்களோடு மக்களாக பணியாற்றி வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. M.செல்வம் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார்… அவர் தம் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு, அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்
தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு.
தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ-மாணவிகளுக்கு காவல் ஆணையர் பாராட்டு. மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் தலைமையில் இயங்கி வரும் மதுரை ரைபிள் கிளப்பின் சார்பாக 63-வது தேசிய துப்பாக்கி சுடும் போட்டி 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று கொண்டிருக்க போட்டியில் மதுரை ரைபிள் கிளப் மாணவ-மாணவிகள் அமர் சக்கரவர்த்தி 1 வெண்கல பதக்கமும், சாம் ஜார்ஜ் சஜன் 1 வெள்ளி […]
சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டு (HALL TICKET) வெளியீடு
சார்பு ஆய்வாளர் (ஆயுதப்படை, தாலுகா மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) எழுத்து தேர்வுக்கான அனுமதி சீட்டு (HALL TICKET) வெளியீடு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2019-ஆம் ஆண்டிற்கான சார்பு ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு வருகின்ற 11.01.2020 (துறை விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) மற்றும் 12.01.2020 (பொது விண்ணப்பத்தாரர்களுக்கான தேர்வு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த நபர்கள் தேர்வுக்கான Hall Ticket-ஐ இணையாதள முகவரியான http://www.tnusrbonline.org/ என்ற Link -ன் மூலம் […]
`வாழவேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே!’- இளம்பெண்ணின்
`வாழவேண்டிய வயதில் இப்படி ஆகிவிட்டதே!’- இளம்பெண்ணின் மரணத்தால் கதறிய பட்டுக்கோட்டை குடும்பம்குறிப்பாக நாத்தனார் எதற்கெடுத்தாலும் திட்டுவது, தான் எந்த வேலையும் செய்யாமல் அல்பாத்தையே எல்லா வேலைகளையும் செய்ய சொல்வது போன்ற கொடுமைகளை செய்து வந்துள்ளார். பட்டுக்கோட்டை அருகே இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் இறந்து விட அவரது தந்தை எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை போலீஸார் கைது […]
கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி மாயம்…24 மணி நேரமாக தேடும் பணி தீவிரம்…
கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி மாயம்…24 மணி நேரமாக தேடும் பணி தீவிரம்…! போலீசாரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளிக்க இறங்கிய கல்லூரி மாணவன் கடலில் மூழ்கிய சம்பவம் அரிச்சல்முனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் சித்ரதுர்கர்ட் பகுதியில் உள்ள கல்லூரியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலாவிற்காக தமிழகம் வந்துள்ளனர். தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளை பார்வையிட்ட பின்னர் சனிக்கிழமை இரவில் ராமேஸ்வரம் பகுதிக்கு வந்து தங்கியுள்ளனர். ஞாயிறன்று காலை 8 மணியளவில் அரிச்சல்முனை பகுதிக்கு […]
கல்விக்கண் திறந்த காமராஜர் சிலைக்கு அவமதிப்பு! -ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷமிகளின் இழிசெயல்!
கல்விக்கண் திறந்த காமராஜர் சிலைக்கு அவமதிப்பு! -ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷமிகளின் இழிசெயல்! தமிழகத்திற்கே கல்விக்கண் திறந்தவர் காமராஜர். அந்தப் பெருந்தலைவரின் திருவுருவச் சிலையில் செருப்பை வைத்து அவமதித்துவிட முடியுமா? இத்தகைய இழிசெயலைச் செய்தவர், நிச்சயம் அகக்கண் அற்றவராகத்தான் இருப்பர். ஸ்ரீவில்லிபுத்தூரில் அப்படி ஒரு சம்பவம் இன்று நடந்து பலரையும் கொந்தளிக்கச் செய்துவிட்டது.ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரத்தில் காமராஜரின் வெண்கல சிலை உள்ளது. யாரோ விஷமிகள், அச்சிலையின் மீது செருப்பை வைத்துவிட்டார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காங்கிரஸ் கமிட்டி காவல்துறையிடம் புகார் மனு அளித்தது. […]
நாங்குநேரி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு சிறுவன் மோதிரத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.
நாங்குநேரி பெரிய குளத்தில் குளிக்கச் சென்ற ஒன்பதாம் வகுப்பு சிறுவன் மோதிரத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி செல்வன் தெருவை சேர்ந்தவர் வானமாமலை. இவரது மகன் செல்வகுமார் (15). இவர் விஜயநாராயணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் நாங்குநேரி பெரிய குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது அங்குள்ள படித்துறையில் சுமார் முக்கால் பவுன் மதிக்கக்கூடிய மோதிரம் ஒன்றை அவர் கண்டு எடுத்துள்ளார். பின்னர் […]
ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்…
ஆம்புலன்ஸை ஓட்டி உயிரை காத்த போலீஸ்காரர்… திருச்சி: “டிரைவர் இல்லையா.. பரவாயில்லை, சாவியை மட்டும் குடுங்க” என்று கேட்டு.. ஆம்புலன்ஸை ஓட்டி வந்து ஒரு உயிரை காப்பாற்றி உள்ளார் போலீஸ்காரர் கணேஷ்.. மனிதநேயம் தழைக்கும் இந்த சம்பவத்தையடுத்து கணேஷூக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருச்சி மாவட்டம், முசிறியை அடுத்துள்ள பகுதி புளியவலசு. இங்கு வசித்து வரும் தம்பதி தியாகராஜன் – சாந்தி.. இவர்களது 14 வயது மகள் பிரியதர்ஷினி. இவர்கள் 3 பேரும் சம்பவத்தன்று மாருதி காரில், […]
தேர்தலின் போது வீறிட்ட பெண் குரல்! பாலியல் வழக்குப்பதிவு செய்த பிறகே வாக்குப்பதிவு!
தேர்தலின் போது வீறிட்ட பெண் குரல்! பாலியல் வழக்குப்பதிவு செய்த பிறகே வாக்குப்பதிவு! தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு நடந்த 27-ஆம் தேதி, தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வாக்குச் சாவடிகளுக்கு சென்ற வண்ணம் இருந்தனர் மக்கள்.விருதுநகர் மாவட்டம் – ஏழாயிரம்பண்ணை அருகிலுள்ள ரெட்டியபட்டியிலும், கிராமத்தினர் பலரும் வாக்களிக்கச் சென்றுவிட்டனர். அதுதான் தருணம் என, அந்தப் பகுதியைச் சேர்ந்த சமுத்திரராஜன், வீட்டில் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் […]