சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காரைக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் அவர்கள் தலைமையில் 05.11.2019 அன்று அழகப்பா பல்கலைக்கழக செஞ்சிலுவை சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பொதுமக்களிடையே ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் சாலை பாதுகாப்பு பற்றியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி […]
Police Recruitment
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக
மதுரை மாநகரின் புதிய காவல் துணை ஆணையராக (குற்றம்) திரு.K. பழனிகுமார் அவர்கள் இன்று (06.11.2019) பொறுப்பேற்றுக்கொண்டார்
இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் 06 11 2019 ஆம் தேதி திருவள்ளூர் சாலையில் மன்னூர் கூட்டுச்சாலையில் காவல்துறை
இன்று மாலை ஸ்ரீபெரும்புதூர் 06 11 2019 ஆம் தேதி திருவள்ளூர் சாலையில் மன்னூர் கூட்டுச்சாலையில் காவல்துறை வேண்டுகோளுக்கிணங்க ஹூண்டாய் ஸ்டீல் நிறுவனம் வேர்ல்டு விஷன் அமைப்பின் மூலம் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளது அதை ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன் IPS அவர்கள் பொதுமக்கள் உபயோகத்திற்காக திறந்து வைத்தார்கள். இதனால் இப்பகுதியில் வாகன விபத்துக்கள் போக்குவரத்து நெரிசல்கள் திருட்டு பயம் போன்றவை நிகழாமல் பொதுமக்கள் அச்சமின்றி வாழ மிகவும் உபயோகமாக இருக்கும். […]
பூட்டிய வீடுகளை நோட்டமிட்ட நான்கு நபர்கள் கைது
நேற்று இரவு மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாண்டியராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பிரகாஷ் மற்றும் ரோந்து காவலர்களுடன் சரக ரோந்து பணியில் இருந்தபோது சொக்கிகுளம் ஜவஹர் ரோட்டில் ஹூண்டாய் காரில் சந்தேகப்படும்படி இருந்த நான்கு நபர்களான 1. ஜெயராமன் 30/19 த/பெ. சரவணன், D/NO. 17, நந்தினி ஆயில் மில், வள்ளி நகர், அல்லிநகரம், தேனி மாவட்டம் 2. நாகராஜ் 29/19,த/பெ. சண்முகசுந்தரம் பிள்ளை சத்திரப்பட்டி சாலை, அரண்மனை புத்தூர், தேனி […]
காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், சம்பந்தப்பட்ட 49 மாணவர்களுக்கு வழக்குபதிவு செய்யாமல், 1330 திருக்குறள்களை எழுத சொல்லி நூதன தண்டனை
பாளையங்கோட்டை வஉசி திடலில் இரு பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை தடுத்த காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், சம்பந்தப்பட்ட 49 மாணவர்களுக்கு வழக்குபதிவு செய்யாமல், 1330 திருக்குறள்களை எழுத சொல்லி நூதன தண்டனை அளித்தார். வாழ்துக்களுடன் காவலர்களின் போலீஸ் இ நியூஸ்
விரைவில் அயோத்தி தீர்ப்பு எதிரொலி: காவலர்கள் விடுப்பு எடுக்க தடை அயோத்தி வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது
அதனால் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமால் இருக்க முன்னெச்சரிக்கையாக காவலர்கள் தயார் நிலையில் இருக்க வரும் 10 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் விடுப்பு […]
இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்களுக்கு, இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நாளை 06.11.2019 புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்தவர்களுக்கு, இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் நாளை (06.11.2019) புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது. ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.
தேசிய ஒற்றுமை தினத்தன்று நாம் உறுதி ஏற்போம் – காவல் துணை கண்காணிப்பாளரின் பேச்சு
தூத்துக்குடி மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்த நாள் மற்றும் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காமராஜ் கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மினி மாரத்தான் போட்டி 31.10.2019-ம் தேதியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மாணவர்களிடத்தில் பேசுகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்வது முக்கியம், ஓட்டுநர் உரிமம் […]
காவலர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு தேனி, திண்டுக்கல்லைச் சேர்ந்தவர்களுக்கு நாளை(06.11.2019) தொடக்கம்
தேனி மாவட்டம் தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை, தீயணைப்புத்துறை பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறுகிறது. அதன்படி தேனி மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்களுக்கு திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நாளை புதன்கிழமை உடல்தகுதி தேர்வு தொடங்குகிறது. இதில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த 1915 ஆண்கள் மற்றும் 982 பெண்கள் மொத்தம் 2,597 நபர்களுக்கு உடல்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இவர்களுக்கு நாளை முதல் 8-ஆம் தேதி வரை உயரம், எடை, மார்பளவு […]
டெல்லியில் சீருடையுடன் போலீசார் திடீர் போராட்டம் …
டெல்லியில் தொடர் மோதல் போக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி காவல்துறை தலைமையகத்தை போலீசார் முற்றுகையிட்டனர். கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது. இதேபோல் நேற்றும் கர்கர்டூமா ((karkardooma)) நீதிமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. மேலும், போலீஸ் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் […]