டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள்புழக்கத்தில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போதைப்பொருள் தடுப்புப் படையினர் நடத்திய விசாரணையில் டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், இமாச்சலபிரதேசத்தில் இருந்து போதைப்பொருள்களை பெற்று இங்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இந்நிலையில், இந்தப் போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடையதாக டெல்லி பல்கலைக்கழக மாணவர் அனிருத் மாத்தூர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் டென்சின், ஏமிதி பல்கலைக்கழக மாணவர் சாம் […]
Month: December 2017
பாலியல் தொல்லை அளித்ததாக மதரஸா மேலாளர் கைது: உ.பி. போலீஸ் சோதனையில் 51 மாணவிகள் மீட்பு
உ.பி.யின் மதரஸாவில் பாலியல் தொல்லை அளித்ததாக அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸார் நடத்திய சோதனையில் அதில் தங்கிப் பயிலும் 51 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளனர். உ.பி.யின் தலைநகரான லக்னோவில் பழைய நகரப் பகுதியில் யாசிர்கன்ச் அமைந்துள்ளது. இங்கு ‘ஜாமியா கதிஜத்-உல்- குப்ரா லிலாப்நத்’ எனும் பெயரில் ஏழை பெண்களுக்கான ஒரு மதரஸா அமைந்துள்ளது. இதன் மேலாளரான முகம்மது தையப் ஜியா என்பவரால் நிர்வாகிக்கப்பட்டு வருகிறது. அதன் மாணவிகளுக்கான விடுதியிலேயே தங்கி இருக்கும் ஜியா அன்றாடம் மாணவிகளை அழைத்து […]
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார்: பெண்களை கிண்டல் செய்வோரை கைது செய்ய உத்தரவு
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்புப் பணியில் 15 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டு இன்று நள்ளிரவு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல் ஆணையர் தீவிரப்படுத்தியுள்ளார். அதன்படி, 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கடற்கரைப் பகுதியில் மட்டும் 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். பைக், கார் பந்தயங்களைத் தடுக்கும் வகையில் 20 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
மதுரை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் உட்பட 7 பேர் கைது
மதுரை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 2 பேர் உட்பட 7 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர். அனைவரும் இரவோடு இரவாக மதுரை அழைத்துச் செல்லப்பட்டனர். மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த வாரம் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், தொடர்புடையவர்களை மதுரை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். இவர்களில் 7 பேர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பதுங்கி இருப்பதாக மதுரை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அந்த மாவட்ட போலீஸார் நேற்று […]
பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் இறந்தவர் உடலை அடையாளம் காண போலீஸாருக்கு உதவ புதிய வசதி: தமிழக காவல் துறையில் அறிமுகம்
தமிழக காவல் துறையில் கிரைம், கிரிமினல் டிராக்கிங் நெட் வொர்க் சிஸ்டம் (சிசிடிஎன்எஸ் ) என்கிற திட்டத்தின் கீழ் பொது இடங்களில் கேட்பாரற்று கிடக்கும் இறந்தவரின் உடலை விரைவில் அடையாளம் கண்டுபிடிக்க போலீஸாருக்கு உதவும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பதிவு செய்யப்படும் எப்ஐஆர், தொடர் நடவடிக்கை, கைதானவரின் ரேகை பதிவு உட்பட அனைத்து விவரங்களையும் ஒருங்கிணைக்கும் சிசிடிஎன்எஸ் என்கிற தகவல்களை ஒருங்கிணைக்கும் ஆன்லைன் திட்டம் செயல்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுவுக்கான […]
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க புதிய கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 31 ம்தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 7.30 மணி வரை கடற்கரை சாலை உள்ளிட்ட ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வரும் கார்கள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்திலும், இருசக்கர வாகனங்கள் பழைய சாராய ஆலை வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
போதைப் பொருட்களை வைத்திருந்த பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் கைது
டெல்லியில் கஞ்சா, எல்.எஸ்.டி. ப்ளாட்டர்ஸ் ((LSD blotters)) போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்த பிரபல கல்லூரிகளின் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். DTDC கொரியர் சர்வீஸ் மூலம், ஜெய்ப்பூருக்கு எல்.எஸ்.டி ப்ளாட்டர்ஸ் அனுப்பப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள், 3 எல்.எஸ்.டி. ப்ளாட்டர்ஸ் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் இந்து கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் போதைப் பொருளை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் […]
பிரெஞ்சு தூதரக முன்னாள் அதிகாரியின் நிலத்தை விற்க முயற்சி – 4 பேர் கைது
புதுச்சேரியில், பிரெஞ்சு தூதரக முன்னாள் அதிகாரியின் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்களைக் கொண்டு விற்க முயன்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூலியன் என்ற அந்த முன்னாள் அதிகாரிக்கு, பிரான்சுவா மார்த்தேன் வீதியில் பூர்விக நிலம் உள்ளது. 16 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்க முயற்சிகள் நடப்பதாக, சாரம் பத்திரப்பதிவு துறையினர் மூலம் ஜூலியனுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரின்படி, போலி […]
கரூர் இளம்பெண் கொலை வழக்கில் ஆட்டோ ஓட்டுநர்கள் 3பேர் கைது
கரூரைச் சேர்ந்த இளம்பெண் கொலையில் ஓராண்டு கழித்துத் துப்புத் துலங்கியதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் 3பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் நடுப்பாளையத்தைச் சேர்ந்த இளையராஜா தன் காதல் மனைவி பர்வீன் பானுவைக் காணவில்லை என 2015ஆம் ஆண்டு வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்துப் பர்வீன் பானுவிடம் செல்போனில் அதிகம் தொடர்பில் இருந்தவர்கள் பெருங்களத்தூரைச் சேர்ந்த ராஜா, மாணிக்கம் ஆகியோர் எனத் தெரியவந்தது. இருவரிடமும் பீர்க்கன்கரணை காவல்துறையினர் விசாரித்ததில் முதலில் ராஜாவுடன் தொடர்பில் இருந்த பர்வீன்பானு […]
மதுரையில் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய 7 பேர் சென்னையில் கைது
மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய 7 பேரை சென்னையில் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரடைஸ் தங்கும் விடுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தங்கும் விடுதியில் சோதனை நடத்திய போலீசார் அங்கு அறை ஒன்றில் தங்கியிருந்த, முகமது ஆருண், தவுபிக் அலி, ரியாசுதீன் உள்ளிட்ட 7 பேரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் மதுரையில் நடந்த குண்டு வெடிப்பு […]