

இளையான்குடி அருகே கல்லடிதிடல் கிராமத்தில் தொடர் மணல் கொள்ளை. ஓட….ஓட….விரட்டி பிடித்தனர். மணல் மாபியா சிக்கினான்!
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா கல்லடிதிடல் கிராமத்திற்கு புத்தூர் வழியாக செல்லும் சாலையில் உள்ள புக்குளம் ஆற்றுப்பகுதியில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வந்த டிராக்டரை போலீசார் விரட்டி பிடித்தனர்.இந்த சம்பவத்தில் டிராக்டரோடு தப்பிக்க முயன்ற டிரைவர் பதற்றத்தில் வேகமாக ஓட்டியதால் தலைகுப்புற கவிழ்ந்தது.விசாரணையில டிராக்டரின் உரிமையாளர் புத்தூரை சேர்ந்த நாகநாதன் மகன் சேதுபதி என்பதும்,ஓட்டியவர் ஆனந்தூரை சேர்ந்த பாண்டி மகன் ராஜா என்பதும் தெரிய வந்ததை தொடர்ந்து சாலைக்கிராமம் காவல் ஆய்வாளர் பாண்டி தலைமையிலான போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.முதன் முறையாக போலீசார் இப்பகுதிக்கு ரோந்து வந்து இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கைது செய்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதுபோன்ற மணல் திருட்டில் ஈடுபடும் மணல் மாபியா கும்பலை பிடிக்க தினந்தோறும் ரோந்து வரவேண்டும் எனவும்,மாபியா கும்பலின் மீது கடுமையான சட்டங்களில் வழக்கு பதிய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
