மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
மதுரை மாநகர் மதிச்சியம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய திரு.சாதுரமேஷ் அவர்கள் அண்ணாநகர் சட்ட ஒழுங்கு பிரிவிற்கு பணி மாற்றமும்,மதுரை தல்லாகுளம் சட்ட ஒழுங்கில் பணியாற்றிய எஸ். செல்வகுமார் அவர்கள் மதிச்சியம் சட்ட ஒழுங்கிற்கும், அண்ணாநகர் குற்றப்பிரிவில் பணியாற்றிய. பாலமுருகன் அவர்கள் தல்லாகுளம் சட்ட ஒழுங்கிற்கும் அண்ணாநகர் சாட்ட ஒழுங்கில் பணியாற்றிய செந்தில்குமரன் அவர்கள் மத்திய குற்றப்பிரிவிற்கும், மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றிய எஸ். பாண்டியன் அவர்கள் அண்ணாநகர் குற்றப்பிரிவிற்கும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
