Police Recruitment

கொலை வழக்கில் தீர்ப்பு : குடைப்பாறைப்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கொலை வழக்கில் தீர்ப்பு : குடைப்பாறைப்பட்டியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

திண்டுக்கல் குடைப்பா றைப்பட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகன்களான தட்சிணா மூர்த்தி கடந்த 2016-ம் ஆண்டிலும், சக்திவேல் 2019-ம் ஆண்டிலும் அடுத்தடுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட னர்.

இந்த கொலை வழக்குகள் திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து முருகேஸ்வரிக்கு பாது காப்பாக முத்தழகுபட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அருளானந்தபாபு(29) என்பவர் இருந்து வந்தார்.

மிட்டாய் வியாபாரம் செய்து வந்த முருகேஸ்வரியின் கம்பெனியில் அருளானந்தபாபுவும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் வத்தல க்குண்டு சாலையில் அருளானந்தபாபு கடந்த 8-ந்தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி, சக்திவேல் ஆகியோரது வழக்கில் இன்று அல்லது நாளை தீர்ப்பு வழங்கப்படஉள்ளது. இதனையடுத்து முருகே ஸ்வரியின் வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் 24 மணிநேர ரோந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.