டிரான்ஸ்பார்மரில் திடீரென பற்றி எரிந்த தீ மதுரையில் பரபரப்பு மதுரையில் பிரதான சாலையான சிம்மக்கல் அருகே செல்லத்தம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே உள்ள டிரான்ஸ் பார்மரில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. மேலும் கீழே ஆயிலும் கொட்டி கிடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து மலமலவென தீ பற்றி எரியத் தொடங்கியதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு […]
Day: April 6, 2024
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது
மதுரையில் வக்கீலை தாக்கியவர் கைது மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாசம் வயது 56 உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இவர் நேற்று முன்தினம் ஜவகர்புரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் வீட்டில் அருகே வசிக்கும் முனீஸ்வரன் வயது (32) என்பவர் அவரது வீட்டில் வளர்க்கும் நாய் அடிக்கடி கூச்சலிடுவதை தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பிரகாசத்தை தாக்கிய முனீஸ்வரன் அவரது செல்போன் மற்றும் இரண்டு சவரன் தங்கச் […]
புகையிலை விற்றவர் மீது வழக்கு
புகையிலை விற்றவர் மீது வழக்கு பேரையூர் பகுதியில் டி.கல்லுப்பட்டி வட்டார உணவு கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரி கோவிந்தன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் அரண்மனை வீதியில் உள்ள முருகன் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் பேரையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் முருகன் உள்ளிட்ட இருவர் மீதும் […]
பெண்ணிடம் அத்து மீறியவர் கைது
பெண்ணிடம் அத்து மீறியவர் கைது மதுரை K. புதூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மெடிக்கலில் மருந்து வாங்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த சுந்தரராஜன்பட்டியை சேர்ந்த பிலாவடியான் வயது (28) என்பவர் அந்தப் பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதனை கண்டித்த அவரது கணவரையும் தாக்கியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கே.புதூர் போலீசார் பிலாவடியானை கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் CCTV கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த காவல் ஆணையர்
திருச்சி மாநகரில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் CCTV கேமராக்கள் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த காவல் ஆணையர் இன்று (05.04.2024)-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் – 2024 முன்னிட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்களும் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் செலவின பார்வையாளர் திரு.சரம்தீப்சின்ஹா, I.R.S, அவர்களும், திருச்சி மாநகரத்தில் செயல்பட்டு வரும் 01 முதல் 09 வரையிலான சோதனை சாவடிகளில் இயங்கி […]
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர்
திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடை பயிற்சி செய்த காவலர்களை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர் திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியினை இன்று 06.04.2024 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.