லஞ்ச ஒழிப்புத் துறையின் தலைமை காவலர் துக்காராம் குடியரசு தின விருது பெற்றார். சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் லஞ்ச ஒழிப்புத்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் துக்காராம். துறை சார்ந்த பணியில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது திறமையான பணியைப் பாராட்டும் வகையில், குடியரசு தின விழாவில் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங் இகாப பரிந்துரையின் பேரில், அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த சிறப்புப் பாராட்டை […]
Month: January 2025
2025 காலெண்டர் வழங்கியபோது DGP Dr.அபாஷ்குமார்,I.P.S., அவர்களுக்கு
தமிழ்நாடு காவல் துறை Firefighting & Security Rescue DGP Dr.அபாஷ்குமார்,I.P.S., அவர்களை சந்தித்து POLICE WELFARE COUNCIL போலீஸ் இ நியூஸ் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் 2025 காலெண்டர் வழங்கியபோது எடுக்கப்பட்ட நினைவூட்டும் புகைப்படம்
ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு
ஊர்க்காவல் படை வீரர்களின் கவாத்து அணிவகுப்பு மதுரை மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 106 வது பேட்ஜ் ஊர்க்காவல் படையை சேர்ந்த 62 (ஆண்- 46,பெண்-16) வீரர்களுக்கான அடிப்படை கவாத்து பயிற்சிகள் மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 25.11.2024 முதல் 22.01.2025 வரை நடைபெற்றது. அதன் நிறைவு நாளான இன்று ஊர்க்காவல் படையினரின் (passing out) கவாத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையர் அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படை வீரர்கள் […]
மதுரையில் தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்
மதுரையில் தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்டத்தை துவக்கி வைத்த காவல் ஆணையாளர் மதுரை மாநகரில் உள்ள 263 கல்வி நிறுவனங்களில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (28.01.2025) மாநகரில் உள்ள தனியார் கல்லூரியில் போலீஸ் அக்கா திட்ட துவக்க விழாவினை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள், பெண்களின் பாதுகாப்பு குறித்தும், காவல் உதவி செயலி […]
மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
மதுரை பசுமலை மேல் நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கடந்த 28-01-2025. செவ்வாய்க் கிழமை பசுமலை மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அவர்கள் அறிவுரையின் படி, பள்ளி தலைமையாசிரியை திருமதி,மேரி அவர்கள், தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் […]
மதுரையில் மாணவிகள் , பெண்கள் மீதான பாலியல் முறையீடுகளை காண்காணிக்க மாநகர காவல் துறை மூலம் “போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம்.
மதுரையில் மாணவிகள் , பெண்கள் மீதான பாலியல் முறையீடுகளை காண்காணிக்க மாநகர காவல் துறை மூலம் “போலீஸ் அக்கா” திட்டம் துவக்கம். மதுரை மாநகர காவல் துறை சார்பில் “போலீஸ் அக்கா ” திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு. மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் “போலீஸ் அக்கா ” திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் கருமுத்து கண்ணன் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அசோக் குமார் தலைமை வகித்தார் . […]
மதுரையில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து காவல்துறையின் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மதுரையில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து போக்குவரத்து காவல்துறையின் விழிப்புணர்வு கருத்தரங்கம் சாலை பாதுகாப்பு மாத விழா வினை முன்னிட்டு நேற்று 29.01.25 காலை மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து அரசு மகளிர் பல் தொழில் நுட்ப கல்லூரியின் மாணவிகள் 200 பேர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளுடன் கல்லூரியிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர் பின்னதாக மாணவிகளுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது இதில் நகர் […]
தென் மாவட்டங்களில் 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது: தீவிர கண்காணிப்பில் குற்றச் செயல்கள் கட்டுப்பாடு.
தென் மாவட்டங்களில் 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது: தீவிர கண்காணிப்பில் குற்றச் செயல்கள் கட்டுப்பாடு. தென் மாவட்டங்களில் பாலியல் வழக்கில் சிக்கிய 70 பேர், போதை வழக்கில் தொடர்புடைய 152 பேர், மற்றும் 598 ரவுடிகள் உட்பட மொத்தம் 862 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, மற்றும் தென்காசி பகுதிகளில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும், ஜாதி மோதலால் ஏற்படும் கொலைகளை தடுப்பதற்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த […]
மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை மதிச்சியம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரை மதிச்சியம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பனங்கல் சாலையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விதிமீறல்களில் ஈடுபடாமல் ஆட்டோ ஓட்டுமாறு அறிவுரை வழங்கப்பட்டதுடன் போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா, சார்பு ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவலர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட ஏறத்தாழ 58 ஆட்டோ ஓட்டுனர்ளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மகளிர் கல்லூரியில் தேசிய கொடியேற்றி மரியாதை
76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மகளிர் கல்லூரியில் தேசிய கொடியேற்றி மரியாதை இன்று 26.01.25 .ஞாயிறு..76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மதுரை சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள்.. தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்… உடன் கல்லூரி முதல்வர் கவிதா… ஆலோசகர் மாரீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.