76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அவர்கள் மகளிர் கல்லூரியில் தேசிய கொடியேற்றி மரியாதை இன்று 26.01.25 .ஞாயிறு..76 வது குடியரசு தின விழாவினை முன்னிட்டு மதுரை சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள்.. தேசிய கொடியினை ஏற்றி மரியாதை செலுத்தி மாணவிகளுக்கு சிறப்புரை ஆற்றினார்… உடன் கல்லூரி முதல்வர் கவிதா… ஆலோசகர் மாரீஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Day: January 26, 2025
மதுரையில் டூ வீலர் திருடிய மூவர் கைது
மதுரையில் டூ வீலர் திருடிய மூவர் கைது மதுரை சூர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் வயது 55 இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இது போன்று கே புதூர் அழகர் நகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவரது டூவீலரும் திருடு போனது. இதுகுறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து சத்திரப்பட்டி சேர்ந்த ஹரி பாவா வயது 23 மூன்று மாவடி பிரவீன் […]
காரில் கடத்திய 495 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரில் கடத்திய 495 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் மதுரை தெப்பக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையிலான போலீசார் பாண்டியன் நகர் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த கர்நாடகா பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்திவரப்பட்டது தெரியவந்தது இதனை தொடர்ந்து காரில் இருந்த 495 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் மேலும் […]
ஆயுதங்களுடன் இருவர் கைது
ஆயுதங்களுடன் இருவர் கைது மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் மதுரை கூடல்நகர் குட் செட் பகுதியில் கூடல்புதூர் எஸ்ஐ கணேசன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சித்தனர் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த போலீசார் நடத்திய சோதனையில் அவர்கள் வைத்திருந்த கைப்பையில் வாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் […]
தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு
தமிழகத்தில் சிறந்த முதலாவது காவல் நிலையமாக மதுரை மாநகர் C3– S.S. காலனி காவல் நிலையம் தேர்வு குற்ற வழக்குகளில் துப்பு துலக்குதல், குற்றவாளிகளைக் கைது செய்தல், தண்டனை பெற்றுத் தருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சொத்துகளை மீட்டுக் கொடுத்தல், பொதுமக்களிடம் நன்மதிப்புடன் நடந்து கொள்ளுதல், காவல் நிலையத்தில் சுகாதாரம் – தூய்மையைப் பேணிக்காத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் 2025-ம் ஆண்டின் சிறந்த காவல் நிலையமாக மதுரை மாநகர் C3 – S.S. காலனி காவல் நிலையம் […]
மதுரை மாநகரில் 76- வது குடியரசு தின விழா – 2025
மதுரை மாநகரில் 76- வது குடியரசு தின விழா – 2025 76- வது குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் திருமதி.சங்கீதா, IAS., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS., அவர்கள் முன்னிலை வகித்தார்.இதனையடுத்து மதுரை மாநகரில் சிறப்பாக பணிபுரிந்த 40 நபர்களுக்கு ஆட்சியர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை […]
மதுரை தெப்பகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு வார கொண்டாட்டம் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர்
மதுரை தெப்பகுளம் பகுதியில் சாலை பாதுகாப்பு வார கொண்டாட்டம் மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுரையில் சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு இன்று 25.01.25. தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியில் 3000 மாணவிகளுக்கு.. திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ. தங்கமணி அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைககள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கினார் மாணவிகள் அனைவரும் விபத்தில்லா மதுரையை உருவாக்குவோம் என்று உறுதிமொழி மேற்கொண்டனர்.
வாகன விபத்து பைகில் சென்றவர் பலி, கேரளா வாலிபர் கைது
வாகன விபத்து பைகில் சென்றவர் பலி, கேரளா வாலிபர் கைது தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் புளியை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை வழியாக கேரளா மாநிலத்திற்கு கனரக வாகனங்களில் கனிம வளம் மற்றும் சிமெண்டுகள் ஏற்றி செல்வதால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகிறது மேற்படி வாகன விபத்துகளை கட்டுப்படுத்த மாவட்ட. காவல் கண்காணிப்பாளர் திரு எஸ் அரவிந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு தமிழ் […]
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள், அறிவுரை வழங்கிய ஆய்வாளர்
இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவர்கள், அறிவுரை வழங்கிய ஆய்வாளர் தென்காசி உட்கோட்டத்திற்கு உட்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் படி செங்கோட்டை காவல் நிலையத்தில் வாகன தணிக்கையின் போது 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து பெற்றோர்களை வரச் சொல்லி தக்க அறிவுரைகள் வழங்கி இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் வாகனம் ஓட்ட அனுமதிக்க கூடாது என்றும் உரிய ஓட்டுனர் […]
காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுக்கள் தென்காசி உட்கோட்டத்தில் நடைபெற்றது
காவலர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக விளையாட்டுக்கள் தென்காசி உட்கோட்டத்தில் நடைபெற்றது தென்காசி மாவட்ட காவல்துறையினர் தங்களது குடும்பத்தை விட்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய தொடர்ச்சியான விழாக்களுக்கான பாதுகாப்பு பணிகளில் அயராது பணியாற்றிய நிலையில் அவர்களின் பணிகளை குறைத்து உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை பொழுதில் காவல்துறையினர் வழக்கம்போல் லத்தி மற்றும் துப்பாக்கிகளை வைத்து நடத்தும் கவாத்து […]