மதுரை மாவட்டம்:-அலங்காநல்லூர்டூவீலரை அடித்துநொறுக்கியவாலிபர்கள்கைதுமதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தாத கவுண்டன்பட்டியைசேர்ந்த மணிமாறன் (24) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தைகீழக்கரை ஜல்லிக்கட்டுமைதானம் அருகே நேற்று முன்தினம் (பிப்4) தேதி நிறுத்திவிட்டு அங்குள்ளதனதுவயலை பார்க்கச்சென்றுள்ளார். அப்போது அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (25), விஜய் (23), கருப்பு (24),நிரஞ்சன்(22),ஆகியோர் சேர்ந்து இருசக்கரவாகனத்தைஅடித்துநொறுக்கியுள்ளனர்.இதுகுறித்து மணிமாறன் அலங்காநல்லூர் காவல்நிலையத்தில்கொடத்தபுகாரின்பேரில் அலங்காநல்லூர்போலீசார் நேற்று(பிப்5) தேதி நால்வரையும் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.
Month: February 2025
மதுரை: கொத்தடிமைதொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி
மதுரை: கொத்தடிமைதொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று காவல் ஆணையர் ,திரு. லோகநாதன்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தலைமையிடம் மற்றும் காவல் ஆணையர் அலுவலக அலுவலர்கள் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரி
மதுரை மாவட்டம்திருமங்கலம்: மின்கம்பி உரசியதில்தீப்பிடித்து எரிந்த லாரிமதுரை அருகே கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் லாரி டிரைவர்,ஹரி பிரதீப் (27) என்பவர் அம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு தென்னைகிடுகுகளைஏற்றிச் சென்றபோது(பிப்7தேதி) மதியம்கள்ளிக்குடி சிவரக்கோட்டைஅருகேநான்கு வழிச்சாலையின் குறுக்கே லாரி சென்றபோதுசென்றமின் கம்பியில் உரசியது. இதனால் காய்ந்ததென்னைக்கிடுகுகள்தீப்பிடித்து லாரி முழுவதும் பரவியது.உடனடியாக கள்ளிக்குடி தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்து.தீயணைப்பு வீரர்கள்2மணிநேரம்போராடிதீயைஅணைத்தனர்.இதுதொடர்பாக கள்ளிக்குடி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? – பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உண்டாக்குகிறது.
அரசு அதிகாரிக்கு கூட இந்த நிலைமை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலைமை? – பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் விவகாரம் அதிர்ச்சி உண்டாக்குகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் காவல் நிலையத்தில் செயல்பட்டு வந்த பெண் உதவி ஆய்வாளர் (SI) பிரணிதா மீது தாக்குதல் நடந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில், விசிக (விழிப்புணர்வு சமூக இயக்கம்) வடக்கு மாவட்ட செயலாளர் இனைய கவுதமன் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ தகவலின்படி, காவல் நிலையத்தில் […]