திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 20 ரவுடிகள் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அதிரடி நடவடிக்கை.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார்உத்தரவுபடி நள்ளிரவு முதல் காவல்நிலையங்களில் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளின் பட்டியலில் உள்ள ரவுடிகளை கைதுசெய்துள்ளனர் காவல்துறையினர்.
திருவாரூர் நகர காவல்நிலையத்தில் கொலை,கொள்ளை,மற்றும் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பட்டியலில் உள்ள 2ரவுடிகள் உட்பட நன்னிலம்,திருவாரூர் தாலுக்கா,முத்துப்பேட்டை,பேரளம்,குடவாசல் உட்பட மாவட்டத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் குற்றவாளி பட்டியலில் உள்ள 20 ரவுடிகளை நள்ளிரவுமுதல் காவல்துறை அதிரடியாக கைது செய்தனர்.
